விருத்தம்
(நாதா நின் சன்னதி வந்தவுடன்)
(நாதா நின் சன்னதி வந்தவுடன்)
ஆறாகக் கண்களில் வந்திடும்நீர் இந்தபூமியில்நீ வாராமல் நின்றிடுமோ
இந்தலோகத்தில் உன்னடி பட்டவுடன்
எந்தன் சோகங்கள் யாவும் பறக்குமம்மா
விடாமலே தொடர்கின்றது வினைஇருளே
ஓட அதைக்காற்றாய் விரட்டுமுந்தன் திருவருளே
ஆதரவற்றவர்க்கு ஆதரவைத்தரும் என்அன்னையே.. என்அன்னையே
சத்யசாயி அன்னையே இந்த ஏழைக்காக இறங்கி வா மண்ணிலே
______________________________
மறுபடியும் அவதரிக்க வேண்டும்சாயிமா
(2)
அம்மா என்வேதனைக்கொர் முடிவுமில்லையா
(2)
அழுகையிலே துடிக்கின்றேனே அறியவில்லையா
வருவாய்நீ
மண்ணில்இன்றே தடுப்பதாரம்மா
எரிமலையாய் எரியுமெந்தன் இதயம்பாரம்மா(2)
உந்தன் உருகும்நெஞ்சை கல்லதாகச் செய்த தாரம்மா(2)
வரணும்-சாயிமா மண்ணில்வரணும்சாயிமா (2)
கண்ணீரிலே
குளித்துவந்தேன் பாசமில்லையா
அம்மா உந்தன் நெஞ்சினிலே வருத்தமில்லையா
பாட்டினிலே
விளக்குகின்றேன் காணவில்லையா(2)
என்தாயே இன்னும்வரத் தோணவில்லையா(2)
வரணும்-சாயிமா மண்ணில்வரணும்சாயிமா (2)
உதிக்கட்டும்
உனதுபிறவி மீண்டும் சாயிமா
மணிவாயால் குரலமுதின் மொழிகள் பேசவா
ஒடிந்திருக்கும்
எந்தன்நெஞ்சைக் காணவில்லையா(2)
இங்கு
கூடிஇருக்கும் ஜனங்கள்உந்தன் சேய்கள் இல்லையா
வரணும்-சாயிமா மண்ணில்வரணும்சாயிமா (2)
நாமாவளி
மெய்யுறுதேகம் கொண்ட தெய்வமில்லையா(2)
மெய்யுருகப்
பாடியது போதவில்லையா
அம்மா நீ
வரணுமென்றே கதறினோமம்மா
நீ வந்திடாமல்
எம்துயரம் அடங்கிஓயுமா
வரணும்-சாயிமா மண்ணில்வரணும்சாயிமா (2)
லோக ரக்ஷகி த்வாரகா மாயிக்கி – ஜெய்
No comments:
Post a Comment