வந்து இருப்பான் தாயாகி சாயி பெருமான்
பந்த மாயமதில் இந்த லோகமதில்
நொந்துவாடு கின்ற பேரை காக்கும்படி
வந்து இருப்பான் தாயாகி சாயி பெருமான்
சிந்தை யாலவனை எண்ணி டாதவரும்
எண்ணி லாதபடி அன்பு கொண்டு விட
மண்ணை யாள உடலாய் உருவாகி
தானாய் தேனாய் ப்ரேம பிரானாய்
வந்து இருப்பான் தாயாகி சாயி பெருமான்
அதர முதிருமவ் வசீகர புன்னகை
மதுர ஹ்ருதய சத்யரூப சதாசிவ
சாயிசுந்தரனவ னோர்மதனோ இல்லை
மண்ணில் வந்த சூர்யகோடியோ என
வந்து இருப்பான் தாயாகி சாயி பெருமான்
சித்தாகி சத்தாகி நிகில மதிலோர் விழி
மிளிர்சிவன் புவிவர நம்மிடை நடந்திட
சித்த மஹோத்தம வெங்கவ தூதரின்
மாபெரும் தவப்பயன் இதுவென வரம்தர
வந்து இருப்பான் தாயாகி சாயி பெருமான்