Showing posts with label எந்த இடம் சென்றாலும். Show all posts
Showing posts with label எந்த இடம் சென்றாலும். Show all posts

Monday, May 4, 2020

580. தித்திடும்ஒருநாமம் (எந்த இடம் சென்றாலும்)



தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்(2)
முக்தி-பெறும்சக்தி-தரும்சொல்லிக்கணமே
சொல்வாய்ஓர்-தரமேஉடன்-சொல்லிடுநெஞ்சே (2)
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
வேதக்கருள்பொருள்--கூறும்ஆதிப்-பரம்பொருள்நாமம்
என்பதனைநினைத்திடுகொஞ்சம்மனமே
இக்கலியில்கடைத்தேறஉரைப்பாய்இக்கணமே
வேறோர்சாதனமேதேவையுண்டோநெஞ்சே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
எண்ணம்-பெரும்காட்டாறுஎன்றும்-ஓயமாட்டாது
உணர்ந்ததைஒதுக்கிடுஎந்தன்-மனமே
எண்ணங்களின்அலை-ஓயஉரைப்பாய்இக்கணமே
உடன்சொல்லிடுநெஞ்சேஏனோதாமதமே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
முக்தி-பெறும்சக்தி-தரும்சொல்லிக்கணமே
எந்தன்துணைநீ-தானேஎந்தன்-குறை..யும்-நீயே
என்றிருக்கும்புதிராகும்உந்தன்-நிலையே
உந்தன்-பணிஉள்ளாகும்அறிவாய்இக்கணமே
உணர்ந்துவிடுநெஞ்சேஏனோதாமதமே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
முக்திபெறும்சக்திதரும்சொல்லிக்கணமே
சொல்வாய்ஓர்-தரமேஉடன்-சொல்லிடுநெஞ்சே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம் (2)

நாமாவளி
(சாய் பஜன்)

கூறிடுவாய்கூறிடுவாய்
ராம-சா..யி-ராம்என்றுகூறிடுவாய்
நிஜம்-தனைப்பார்த்திடநிஜவடிவாகிட
சாயி-பொன்நாமத்தைக்கூறிடுவாய்
எதுதரும்பேரின்பம்எதுதரும்ஆனந்தம்
என்பதைநீகொஞ்சம்எண்ணிடுவாய்



Sunday, March 17, 2019

102. எவ்வுலகம் சென்றாலும் (எந்த இடம் சென்றாலும்) - RECORDED





எவ்வுலகம் சென்றாலும் என்ன-தவம் செய்தாலும் (2)
சாயி-அன்பைத் தந்திடவே..றொன்றுவருமோ
பேரா..னந்தம்-தருமோ .. ஒரு நாளும் வருமோ
மந்திரத்தின் விளைவாலும் தந்திரங்கள் தன்னாலும் (2)
வந்திடுமோ அன்னையைப் போல் அன்புதருமோ
சிந்தையிலே நீகூறு சாயிஜெபமே (2)
 பேரா..னந்தம்பெறவே திருப் பாதம்எழவே (2)
என்ன-விலை தந்தாலும் செல்வதனம் வந்தாலும் (2)
வருத்திடும் வினைகளும் சென்று விடுமோ
சிந்தையிலே நீகூறு சாயிஜெபமே (2)
திருப் பாதம்எழவே பேரா..னந்தம்பெறவே
அன்பின்-மழை வாராதோ எந்தன்-குறை தீராதோ
என்றிருக்கத் துணையாகும் சாயி பதமே
சிந்தையிலே நீகூறு சாயிஜெபமே (2)
திருப் பாதம்எழவே பேரா..னந்தம்பெறவே
எவ்வுலகம் சென்றாலும் என்ன-தவம் செய்தாலும்
சாயி-அன்பைத் தந்திடவே..றொன்றுவருமோ


Sunday, June 14, 2015

4. அன்புருவாய் வந்தாயே (எந்த இடம் சென்றாலும்)





(எந்த இடம் சென்றாலும்)
விருத்தம்

திங்களை முடியில் கொண்ட 
அந்த சிவனாரின் அம்சம்கொண்ட சாயீசனே
எங்களின் தெரியாத்தனமும் அறியாத்தனமும் நீங்கி
இனிதே வாழ உமதருள் வேண்டும் ஐயனே.. சாயீசனே..

_____________

அன்புருவாய் வந்தாயே தந்தைதாயும் நீசாயி (2)
என்றுவந்து அருள்தரும் உந்தன்பதமே (2)
ஏனோ தா..மதமே.. உடன் வந்திடுசாயி (2)
(அன்புருவாய் வந்தாயே..)
என்வினைகள் தனைச்சாடும் உன்பதத்தை தினம்காணும் (2)
தொந்தரவைப் புரியுது எந்தன் மனமே
பூமியிலே நடமாட வருவாய் இக்கணமே (2)
 ஏனோ தா.மதமே..உடன்வந்திடுசாயி
 (அன்புருவாய் வந்தாயே..)
நாங்கள்படும் பாட்டாலும் எங்களிசைப் பாட்டாலும் (2)
கரைந்துநீ கனிந்திடு உந்தன் மனமே (2)
பூமியிலே நடமாட வருவாய் இக்கணமே
உடன்வந்திடுசாயி... ஏனோதா..மதமே..(அன்புருவாய் வந்தாயே..)
எங்கள்பிழை பொறுப்பாயே எங்கள்குறை மறப்பாயே (2)
எங்களுக்குத் துணையாரும் இங்குஇல்லையே (2)
பூமியிலே நடமாட வருவாய் இக்கணமே

உடன்வந்திடுசாயி... ஏனோதா..மதமே..
(அன்புருவாய் வந்தாயே..)

நாமாவளி
யார்தருவார்(பஜமனராம்- சாயி பஜன் )
------------
யார்தருவார் யார்தருவார்
சாயிஉன் ப்ரேமையை யார்தருவார்
தினம்நட..மாடிட தினம்தினம் பேசிட
தாய் வடிவாகவே யார்வருவார்
இறைவடிவாய் வந்த தரிசனமே..தந்த
சாயிஉன் போல்இங்கே யார்வருவார் (2)

நாமாவளி(சாயி பஜன் )

பஜமனராம் பஜமனராம் 
பாண்டுரங்க ஸ்ரீரங்க பஜமனராம்
பஜமன மாதவ பஜமனகேசவ
பஜமன யாதவ பஜமனராம்
பஜமன முகுந்த பஜமன கோவிந்த
பஜமன ஆனந்த பஜமனராம்
_________


ஷீரடி பர்த்தி ராமச்சந்த்ர மூர்த்திக்கி – ஜெய்