Sunday, June 14, 2015

4. அன்புருவாய் வந்தாயே (எந்த இடம் சென்றாலும்)





(எந்த இடம் சென்றாலும்)
விருத்தம்

திங்களை முடியில் கொண்ட 
அந்த சிவனாரின் அம்சம்கொண்ட சாயீசனே
எங்களின் தெரியாத்தனமும் அறியாத்தனமும் நீங்கி
இனிதே வாழ உமதருள் வேண்டும் ஐயனே.. சாயீசனே..

_____________

அன்புருவாய் வந்தாயே தந்தைதாயும் நீசாயி (2)
என்றுவந்து அருள்தரும் உந்தன்பதமே (2)
ஏனோ தா..மதமே.. உடன் வந்திடுசாயி (2)
(அன்புருவாய் வந்தாயே..)
என்வினைகள் தனைச்சாடும் உன்பதத்தை தினம்காணும் (2)
தொந்தரவைப் புரியுது எந்தன் மனமே
பூமியிலே நடமாட வருவாய் இக்கணமே (2)
 ஏனோ தா.மதமே..உடன்வந்திடுசாயி
 (அன்புருவாய் வந்தாயே..)
நாங்கள்படும் பாட்டாலும் எங்களிசைப் பாட்டாலும் (2)
கரைந்துநீ கனிந்திடு உந்தன் மனமே (2)
பூமியிலே நடமாட வருவாய் இக்கணமே
உடன்வந்திடுசாயி... ஏனோதா..மதமே..(அன்புருவாய் வந்தாயே..)
எங்கள்பிழை பொறுப்பாயே எங்கள்குறை மறப்பாயே (2)
எங்களுக்குத் துணையாரும் இங்குஇல்லையே (2)
பூமியிலே நடமாட வருவாய் இக்கணமே

உடன்வந்திடுசாயி... ஏனோதா..மதமே..
(அன்புருவாய் வந்தாயே..)

நாமாவளி
யார்தருவார்(பஜமனராம்- சாயி பஜன் )
------------
யார்தருவார் யார்தருவார்
சாயிஉன் ப்ரேமையை யார்தருவார்
தினம்நட..மாடிட தினம்தினம் பேசிட
தாய் வடிவாகவே யார்வருவார்
இறைவடிவாய் வந்த தரிசனமே..தந்த
சாயிஉன் போல்இங்கே யார்வருவார் (2)

நாமாவளி(சாயி பஜன் )

பஜமனராம் பஜமனராம் 
பாண்டுரங்க ஸ்ரீரங்க பஜமனராம்
பஜமன மாதவ பஜமனகேசவ
பஜமன யாதவ பஜமனராம்
பஜமன முகுந்த பஜமன கோவிந்த
பஜமன ஆனந்த பஜமனராம்
_________


ஷீரடி பர்த்தி ராமச்சந்த்ர மூர்த்திக்கி – ஜெய்


No comments:

Post a Comment