Showing posts with label அழகுஅழகு அழகுஅழகு ஐயப்பன் அழகு. Show all posts
Showing posts with label அழகுஅழகு அழகுஅழகு ஐயப்பன் அழகு. Show all posts

Friday, May 1, 2020

345. அழகுஅழகு அழகுசாயி (அழகுஅழகுஅழகு... ஐயப்பன் அழகு)










விருத்தம்
சுத்த சத்வம் பேரழகு சிவரூபம் பேரழகு
மானுட வேஷத்தில் ப்ரம்மம் நடப்பது பேரழகு
சஹஜ சௌலப்யம் பேரழகு குடை-போல கருஞ்சடை பேரழகு  
விண்டு-உன் பேரழகை நான் எப்படிச் சொல்வேன் சாயி.. ______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________


அழகு அழகு அழகு-சாயி அன்பெனும் அழகு (2)
அது வழிந்தோடும் அவன்இதயம் உருகிடும் மெழுகு (2)
அழகு அழகு அழகு-சாயி அன்பெனும் அழகு
தினம்வழங்கும் தரிசனத்தின் காட்சியும் அழகு
அங்கே கைதூக்கி அவன்-அருளும் மாட்சிமை அழகு
ஆஹா-விழி வழிந்தோடும் வாத்சல்யம் அழகு (2)
அவன் வில்புருவம் தூக்குவதோ அழகோ அழகு  
(அழகு அழகு அழகு சாயி அன்பெனும் அழகு)
சின்னஞ்சிறார் கன்னம்தனைத் தட்டுதல் அழகு
அந்த துன்னபோத்து என்ற-செல்லத் திட்டுதல் அழகு
ஏழுலகம் முழுவதிலும் ஏதிந்த அழகு (2)
அதைக் கண்டிடுவோர் கண்-நிறையும் அழகோ அழகு
(அழகு அழகு அழகு சாயி அன்பெனும் அழகு)
கண்ணெட்டும் வரை-பக்தர் தலையிடை மிதந்து
ஒரு-ஹம்சமென அவன்-நடந்து வருவது-அழகு
மெய்-தானே மெய்கொண்டு சிரிப்பது அழகு (2)
இது ஆனந்த சௌந்தர்ய லஹரியின் அழகு
அழகு அழகு அழகு சாயி அன்பெனும் அழகு
அது வழிந்தோடும் அவன்இதயம் உருகிடும் மெழுகு (2)
அழகு அழகு அழகு சாயி அன்பெனும் அழகு (2) (fast)
அழகு அழகு அழகு சாயி அன்பெனும் அழகு
சாயி அன்பெனும் அழகு (2)
சாயி அழகுக்கு அழகு
சாயி அன்பெனும் அழகு (2

நாமாவளி
ஹே சாயி சிவா (மாம்பாஹி குரோ பக்திம் தேஹி விபோ)






ஹே சாயிசிவா பவம் போக்கு பவா
ஹே-சாயி-சர்வே..சா உன்பாத சரணம்
ஹே சாயிசிவா பவம் போக்கு பவா
ப்ரசாந்தி நிலையா ப்ரேமஸ்வரூபா பர்த்திபுரீ நாதா
பர்த்திபுரீ நாதா
சத்ய ஸ்வரூப சித்ராவதி தீரா ஹே பர்த்தீ சாயி
ஹே சாயிசிவா பவம் போக்கு பவா (2)
மாதா ஈஸ்வரி மங்கள தனயா யாருண்டோ உன்போல்
யாருண்டோ உன்போல்
த்வாரக வாசகோ..தாவரி-தீரா ஹேஷீ..ரடிசா..யி
ஹே சாயிசிவா பவம் போக்கு பவா (2)
ஹே-சாயி-சர்வே..சா உன்பாத சரணம்
ஹே சாயிசிவா பவம் போக்கு பவா (n)

சுந்தர வதன சத்ய சாயி பகவானுக்கி- ஜெய்





Azhagu Azhagu Azhagu-Saayi anbenum-Azhagu (2)
Adhu vazhindhodum avan idhayam Urugidum Mezhugu (2)
Azhagu Azhagu Azhagu-Saayi anbenum-Azhagu 

Dhinam Vazhangum Dharisanatthin Kaatchiyum Azhagu
Angae Kaithooki avan arulum Maatchimai azhagu
Aaaha vizhi vazhindhodum vaatsalyam azhagu
Avan vil-puruvam thookkuvadho Azhago azhagu (2)
Azhagu Azhagu Azhagu-Saayi anbenum-Azhagu

Chinnanchiraar Kannamthanaith thattudhal azhagu
Andha Dhunnapotthu enra-chellath thittudhal azhagu
Eazhulagam Muzhuvadhilum Yedhindha azhagu
Adhaik kandiduvoar KaN niraiyum Azhago Azhagu (2)
Azhagu Azhagu Azhagu-Saayi anbenum-Azhagu

Kannettum Varai bakthar thalai-idai midhandhu
Oru Hamsamena avan nadandhu varuvadhu azhagu
Mei-thaane mei-kondu sirippadhu azhagu (2)
Idhu aanandha Soundharya Lahariyin azhagu

Azhagu Azhagu Azhagu-Saayi anbenum-Azhagu 
Adhu vazhindhodum avan idhayam Urugidum Mezhugu
(2)
Azhagu Azhagu Azhagu-Saayi anbenum-Azhagu (2) (fast)
Azhagu Azhagu Azhagu-Saayi anbenum-Azhagu 
Saayi anbenum-Azhagu (2)
Saayi azhagukku azhagu
Saayi anbenum-Azhagu (2)

Sundharavadhana Sathya Saayi bagavaanukki-Jai


344. பழகுபழகு சாயிநாமம்(அழகுஅழகு அழகுஅழகு ஐயப்பன் அழகு)



பழகு பழகு சாயி நாமம் சொல்லியே பழகு (2)
அது மாயச் சுழலில் நமைத் தாங்கும் மாபெரும் விழுது (2)
பழகு பழகு சாயி நாமம் சொல்லியே பழகு
(Music)
  அனுதினமும் நாமம் சொல்லி மனதினில் அழுது
அது பனியெனவே உருக நீங்கும் விரைவினில் பழுது
ஐயா வினை விலகாமல் தாக்கிடும் பருந்து (2)
அவன் நாமம் சொல்ல போகும் அது சட்டெனப் பறந்து
(பழகு பழகு சாயி நாமம் சொல்லி நீ பழகு)
(Music)
சொல்லிப் பாடு அவன் புகழை அன்பினில் கசிந்து
அந்த நாம ஜபம் தனைநீயும் பலருடன் இசைந்து
பாடும் நாவில் மணக்குமது அளவினில் சிறிது (2)
வீடுபேற்றை அளிக்கும் அதன் பலமோ பெரிது
(பழகு பழகு சாயி நாமம் சொல்லி நீ பழகு)
(Music)
திக்கெட்டும் புகழ் மணக்கும் சேவையைப் புரிந்து
நம் சாயிபிரான் வகுத்தளித்த பாதையில் நடந்து
நாவாலே சாயி சாயி என மனம் கசிந்து (2)
சொன்னவரின் நோய்போக்கும் நாமத்தின் மருந்து
(பழகு பழகு சாயி நாமம் சொல்லி நீ பழகு)
பழகு பழகு சாயி நாமம் சொல்லியே பழகு
நாமம் சொல்லியே பழகு (2)
சாயி நாமத்தைப் பழகு

சுந்தர வதன சத்ய சாயி பகவானுக்கி- ஜெய்



339. இனிது இனிது சாயி நாமம்(அழகுஅழகு அழகுஅழகு ஐயப்பன் அழகு )




இனிதுஇனிது சாயிநாமம் அமிழ்தினும் இனிது
அதைச்சொல்லுகின்ற போதுஉருகும் நெஞ்செனும் மெழுகு
(இனிதுஇனிது சாயிநாமம் ..) - 2
   வினைவிலக்கும் சாயிநாம மாட்சியும் இனிது
நன்கே அதுகொடுக்கும் உயர்ந்த-த்யான எழுச்சியும் இனிது
ஆஹாதிரு நீறோடும் காட்சியும் இனிது (2)
அதைத் தந்துவிரல் சுண்டுமழகு இனிதோ இனிது  
(இனிதுஇனிது சாயிநாமம் ..) - 2
    கண்ணிரண்டில் நிறையும்உலாக் காட்சியும் இனிது
அதைமீண்டும் மீண்டும் கண்டிடவே தவித்திடும் மனது
ஊழ்வினையின் நோய்க ளைய அதுபெரும் மருந்து (2)
நமது-ஆத்மப்பசி தனக்குஅது அதுவே விருந்து
(இனிதுஇனிது சாயிநாமம் ..) - 2
பதினெட்டு சாத்திரத்தின் சாரத்தைப் பிழிந்து
அதை நமக்களித்தான் சாயிபிரான் அன்பெனச் சுரந்து
கையாலே உதவிசெய்ய நீதினம் பழகு (2)
உயிர்த் துன்புறுத்தல் தனைவிடுத்து சேவையைப் புரிந்து
(இனிதுஇனிது சாயிநாமம் ..)


நாமாவளி
(பலபலபலபல பாட்டு பாடிக் கூப்பிடுவோம்- நாமாவளி)
சாயிசாயி சாயிசாயி
நாமம் சொல்லிக் கூப்பிடுவோம்
சாயிராம் என்று சொல்லிக் கூப்பிடுவோம்
சாயி நாமத்தைச் சொல்லிடுவோம்
அனுதினம் சொல்லிடுவோம் சாயிராம் எனச்சொல்லுவோம்
வரும்வரை சொல்லுவொம் பெறும் வரைச் சொல்லுவோம்
ஹேசாயி ஹேசாயிராம்… ஹேசாயி ஹேசாயிராம்…
(சாயிசாயி சாயிசாயி ) நாமம் சொல்லிக் கூப்பிடுவோம்
சாயிராம் என்று சொல்லிக் கூப்பிடுவோம் (n)