Friday, May 1, 2020

339. இனிது இனிது சாயி நாமம்(அழகுஅழகு அழகுஅழகு ஐயப்பன் அழகு )




இனிதுஇனிது சாயிநாமம் அமிழ்தினும் இனிது
அதைச்சொல்லுகின்ற போதுஉருகும் நெஞ்செனும் மெழுகு
(இனிதுஇனிது சாயிநாமம் ..) - 2
   வினைவிலக்கும் சாயிநாம மாட்சியும் இனிது
நன்கே அதுகொடுக்கும் உயர்ந்த-த்யான எழுச்சியும் இனிது
ஆஹாதிரு நீறோடும் காட்சியும் இனிது (2)
அதைத் தந்துவிரல் சுண்டுமழகு இனிதோ இனிது  
(இனிதுஇனிது சாயிநாமம் ..) - 2
    கண்ணிரண்டில் நிறையும்உலாக் காட்சியும் இனிது
அதைமீண்டும் மீண்டும் கண்டிடவே தவித்திடும் மனது
ஊழ்வினையின் நோய்க ளைய அதுபெரும் மருந்து (2)
நமது-ஆத்மப்பசி தனக்குஅது அதுவே விருந்து
(இனிதுஇனிது சாயிநாமம் ..) - 2
பதினெட்டு சாத்திரத்தின் சாரத்தைப் பிழிந்து
அதை நமக்களித்தான் சாயிபிரான் அன்பெனச் சுரந்து
கையாலே உதவிசெய்ய நீதினம் பழகு (2)
உயிர்த் துன்புறுத்தல் தனைவிடுத்து சேவையைப் புரிந்து
(இனிதுஇனிது சாயிநாமம் ..)


நாமாவளி
(பலபலபலபல பாட்டு பாடிக் கூப்பிடுவோம்- நாமாவளி)
சாயிசாயி சாயிசாயி
நாமம் சொல்லிக் கூப்பிடுவோம்
சாயிராம் என்று சொல்லிக் கூப்பிடுவோம்
சாயி நாமத்தைச் சொல்லிடுவோம்
அனுதினம் சொல்லிடுவோம் சாயிராம் எனச்சொல்லுவோம்
வரும்வரை சொல்லுவொம் பெறும் வரைச் சொல்லுவோம்
ஹேசாயி ஹேசாயிராம்… ஹேசாயி ஹேசாயிராம்…
(சாயிசாயி சாயிசாயி ) நாமம் சொல்லிக் கூப்பிடுவோம்
சாயிராம் என்று சொல்லிக் கூப்பிடுவோம் (n)





No comments:

Post a Comment