Friday, May 1, 2020

340. பர்த்தி நாயகன் (பழனி ஆண்டவர் பவனி வருகிறார்)-Recorded




பர்த்திநாயகன் அன்பைப் பரப்பினான் இந்தப் பாரினிலே (2)
அவன் ப்ரேமசாயிராம் என்ற பெயரிலே திரும்பி வருவானே
பர்த்திநாயகன் அன்பைப் பரப்பினான் இந்தப் பாரினிலே
மாடென மாயச் செக்கில்-சுழன்ற மாந்தர்களின் மனதில் (2)
மாபெரும் மாற்றங்கள் செய்தவன்சேவை செய்திட வைத்தானே (2)
பர்த்திநாயகன் அன்பைப் பரப்பினான் இந்தப் பாரினிலே 
காவியுடை புரண்டாட ஸ்வாமியவன் நடைபோட (2)
இங்கே இங்கே என்றே பக்தர்கள் கரம் நீள (2) 
நெஞ்சமும் குதித்தாட சாயிராம் எனப் பாட (2)
கரகர வென-சுழல் கரம்திரு நீற்தர 
அழகுற அவன் வர தினம் திருவருள் தர
பர்த்திநாயகன் அன்பைப் பரப்பினான் இந்தப் பாரினிலே 
ஆத்மஸ்வரூபலாரா ப்ரேமஸ்வரூபலாரா
திவ்யாத்மஸ்வரூபலாரா ப்ரேம ஸ்வரூபலாரா
எனறவன் மொழி-காதில் தேனெனப் பாய்ந்தோடும் (2)
ஆஹாஹா அது போதும் வேறினி எது வேணும் (2)
தினம்ஒரு மொழிஎன அவன்அருள் வழிதர
பர்த்திநாயகன் அன்பைப் பரப்பினான் இந்தப் பாரினிலே
இந்தப் பாரினிலே… இந்தப் பாரினிலே

நாமாவளி
(வனமாலி வாசுதேவா-நாமாவளி)

ஸ்ரீ சாயி தேவ தேவா ஜகத்காரண நாதா பாபா
ஜகத்காரண நாதா பாபா 
பர்த்தி-சதனா விகஸித வதனா ஜகத் காரண நாதா பாபா  
ஜகத்காரண நாதா பாபா
நாதா பாபா 

கலியுக அவதார ஷிரடி பர்த்தி ப்ரேமசாயி பகவானுக்கி – ஜெய்


No comments:

Post a Comment