Friday, May 1, 2020

341. நொந்த இந்தப் பாரினிலே(தங்க மயில் வாஹனனே)




நொந்..தஇந்தப் பாரினிலே அருள்தந்தபர்த்தி சாயிசிவா ஸாயிராம்
ப்ரேமசாயி வடிவுடனே தோன்றி நீஇங்கு வா-உடனே

துன்னப்போத்து என்..றழைத்து கொஞ்சிச் செல்லக்கோபம் கொண்டாயே சாயிராம்
அன்பமுது வந்தளிக்க இந்த மண்ணிரங்கி வா தாயே…!
(நொந்தஇந்தப் பாரினிலே…)
மண்சிறந்த பரதத்திலே அழகு புட்டபர்த்தி தலத்தினிலே சாயிராம்
மா..னிட..னாக..நிதம் எமக்கு அன்பளிக்க நடந்தவனே…!
(நொந்தஇந்தப் பாரினிலே…)
தாகம்-தீர்க்க நீரளித்தாய் வினையின் மாயம்-போக்க நீறளித்தாய் சாயிராம்
வேண்டியதெல்லா..மேகொடுத்தாய் அதைநான் வேண்டாம..லேகொடுத்தாய்
(நொந்தஇந்தப் பாரினிலே…)
கல்விதந்த கலைவாணி உடல் நோய்களைந்த இறைவா-நீ நீ-நீ  
அள்ளித்தந்த நீஎனக்கு மண்ணுக்குத் தந்தைதாயுமானாயே..!
(நொந்தஇந்தப் பாரினிலே…)

நாமாவளி
(same tune as pallavi)

சத்யசாயி சா..யி..ராம் சாய்ராம் ஷிரடிசாயி சா..யி..ராம் சாய்ராம்
ப்ரேமசாயி சா..யி..ராம் சாய்ராம் சாயி சாயி சாயிராம்
(or)
 சத்யசாயி பாபா வா சாய்ராம் ஷிரடிசாயி பாபா வா சாய்ராம்
ப்ரேமசாயி வாவாவா சாய்ராம் எங்கள் சாயி வா வா வா  


No comments:

Post a Comment