ஹரி ஹரனே சாயீசா ..பர்த்தீ ஷீரடி புரி சதனா (2)
சத்தியத் திருமகன் எப்பவு மருள்பவன்
நித்தியம் உன்பதம் பணிவோமே
கற்றிட வேறிலை புத்தியில் உன்பெயர்
கொண்டிட எழும்பே..ரறிவா,,, மே
ஹரி ஹரனே சாயீசா ..பர்த்தீ ஷீரடி புரி சதனா (2)
பெத்தவெங்..கமராஜு உத்தமீஸ் வரிமகன்
இன்னொரு முறைபுவி வருவாயே
எம்மத மாயினும் சம்மத மெனும்-நீ
ஞானியர் உளம்நிறை இறைதானே
ஹரி ஹரனே சாயீசா ..பர்த்தீ ஷீரடி புரி சதனா (2)
செந்தமிழ் உன்புகழ் சொற்பட எழுதிட
திக்குது திணறுது முடியா..மே
எவ்வரம் வேண்டினும்
தந்தேனிப்..பவேயென
நின்னருள் திருநீறளிப்பாயே
ஹரி ஹரனே சாயீசா ..பர்த்தீ ஷீரடி புரி சதனா (2)
அஞ்சனை மகன்துதி சுப்பிரமணித் துதி
இப்படிப் பண்முறை தரும் சாயி
உன்பத மலர்பட இச்சிறு
மகனெதிர்
இக்கணம் நடந்தருள் தருவாயே
ஹரி ஹரனே சாயீசா ..பர்த்தீ ஷீரடி புரி சதனா (2)
(Alternate Pallavi : வா உடனே சாய்நாதா ..பர்த்தீ ஷீரடி புரி சதனா)
No comments:
Post a Comment