Showing posts with label கொஞ்சி கொஞ்சி பேசி. Show all posts
Showing posts with label கொஞ்சி கொஞ்சி பேசி. Show all posts

Sunday, May 3, 2020

442. சின்னச் சின்னக் கண்ணா (சின்னச்சின்ன பாதம் சிவபாதம்)



சின்னச் சின்னக் கண்ணா சாயி கண்ணா  
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னா
(2)
ஒட்டிடக் குதிரையை நான்தருவேன் வா-நடை வண்டியை நான்-தருவேன் . 
வெண்ணை-உண்ட வாயா என்னைக்-கொண்ட தூயா 
என்னிடம் நீ கொஞ்சம் வருவாயா
என்னிடம் நீ கொஞ்சம வருவாயா.. வா..
 சின்னச் சின்னக் கண்ணா சாயி கண்ணா  
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னா
பாரு-பாரு-நீ எனைப்பாரு கூறு-கூறு-உன் மொழி-கூறு 
உந்தன்-விழி-மானா அன்பின்-மொழி-தேனா 
அதை நான் என்றும் மறப்பேனா.. வா..
சின்னச் சின்னக் கண்ணா சாயி கண்ணா  
எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னா 



Friday, May 1, 2020

358. சாயிராம என்னும் ஒருநாமம் (சின்னச் சின்ன பாதம்)-கொஞ்சி கொஞ்சி பேசி


சாயிராம என்னும் திருநாமம் 
கர்மவினை போக்கும் அருள்சேர்க்கும்
(2)
நான்மறை யதனில் கருவாகும் 
நாமமே ப்ரணவத்தின் உருவாகும்  
இன்பம் பொங்கும் தேனாய் பொங்கும்-ஒளி தானாய்
என்றும் துணை சாயி திருநாமம்
ஓம்….சாயிராம என்னும் திருநாமம் 
கர்மவினை போக்கும் அருள்சேர்க்கும்
மனதில்-நெகிழ்ந்துருகி நாம் சொல்வோம் 
கணத்தில் பவபயத்தின் பகை வெல்வோம்
பவநோய் தொடர்ந்து வரும்ஒரு பருந்து 
நாமமே அதற்கொரு அருமருந்து 
ஓம்….சாயிராம என்னும் திருநாமம் 
கர்மவினை போக்கும் அருள்சேர்க்கும்
த்ரௌபதி மானம் காத்தததே கஜேந்திரன்-சோகம் போக்கியதே
சௌக்கியம் சேர்க்கும் வைத்தியம் பார்க்கும் 
பைத்தியம் போல் அதை ஜபித்திடுவோம்
அந்த..சாயிராம என்னும் திருநாமம் 
கர்மவினை போக்கும் அருள்சேர்க்கும்

நாமாவளி
சாயிராம ராம் ராம் சாய்ராம் ராம் (2) – n times







Wednesday, April 22, 2020

176. மண்ணில் வரும் சாயி (சின்னச்சின்ன பாதம் சிவபாதம்)


மண்ணில் வரும்சாயி இறையாவான் 
கண்ணின்-இமைபோலே நமைக்காப்பான் 
(2)
கலியினில் இருதிரு வடிவினிலே உலகினில்இறைஅவ..தரித்தானே

ஷிரடியில்ஒருவன் பர்த்தியின்இறைவன்
மறுபடிப்ரேமையில் தோன்றிடுவான் 
(2)
மண்ணில் வரும்சாயி இறையாவான் கண்ணின்-இமைபோலே நமைக்காப்பான்

நூறு மொழிபேசும் உலகினிலே அன்பு மொழிஒன்று தனைக்கொண்டே

ஜனங்களைக்-கவர்ந்தான் மனங்களில்-புகுந்தான்
மாற்றத்தை-அற்புத..மாய்ப்புரிந்தான்
(2)
.. இந்த
மண்ணில் வரும்சாயி இறையாவான் கண்ணின்-இமைபோலே நமைக்காப்பான்

இனித்திடும்-அவன்பேர் சொல்வோமே
தொடர்ந்திடும்-வினைதனை வெல்வோமே
 
சாயி ராமசத்ய சாயீராம் சாயி ராமஷிர..டீபகவான்
 (2)

 சாய்ராம் சாயிராம் சாய்ராம் சாய்ராம்
சாய்ராம் சாய்ராம் சாயீராம்
(2)



Mannil varum Saayi Iraiyaavaan Kannin Imai polae namaik kaappaan
Kaliyinil iruthiru vadivinile ulaginil Irai-ava.dharitthaanae
Shiradiyil oruvan Partthiyin iraivan Marupadi Premaiyil thonriduvaan
Mannil varum Saayi Iraiyaavaan Kannin Imai polae namaik kaappaan
Nooru Mozhi-pesum ulaginilae anbu mozhi onru thanaik kondae
Janangalaik Kavarndhaan Manangalil Pugundhaan maatratthai arputhamaaip purindhaan (2)
Indha
Mannil varum Saayi Iraiyaavaan Kannin Imai polae namaik kaappaan
Initthidum avan peyar solvomae thodarndhidum  vinaithanai Velvomae
Saairam Saairam Saairam Saairam SaAiramm Saairam SaayeeRaam(2)