சாயிராம என்னும் திருநாமம்
கர்மவினை போக்கும் அருள்சேர்க்கும்
(2)
நான்மறை யதனில் கருவாகும்
நாமமே ப்ரணவத்தின் உருவாகும்
இன்பம் பொங்கும் தேனாய் பொங்கும்-ஒளி தானாய்
என்றும் துணை சாயி திருநாமம்
ஓம்….சாயிராம என்னும் திருநாமம்
கர்மவினை போக்கும் அருள்சேர்க்கும்
மனதில்-நெகிழ்ந்துருகி நாம் சொல்வோம்
கணத்தில் பவபயத்தின் பகை வெல்வோம்
பவநோய் தொடர்ந்து வரும்ஒரு பருந்து
நாமமே அதற்கொரு அருமருந்து
ஓம்….சாயிராம என்னும் திருநாமம்
கர்மவினை போக்கும் அருள்சேர்க்கும்
த்ரௌபதி மானம் காத்தததே கஜேந்திரன்-சோகம் போக்கியதே
சௌக்கியம் சேர்க்கும் வைத்தியம் பார்க்கும்
பைத்தியம் போல் அதை ஜபித்திடுவோம்
அந்த..சாயிராம என்னும் திருநாமம்
கர்மவினை போக்கும் அருள்சேர்க்கும்
நாமாவளி
சாயிராம ராம் ராம் சாய்ராம் ராம் (2) – n times
No comments:
Post a Comment