Showing posts with label ஓம் என்று நினைத்தாலே போதும். Show all posts
Showing posts with label ஓம் என்று நினைத்தாலே போதும். Show all posts

Monday, May 4, 2020

491. ஒரு சாயி திருநாமம் (ஓம் என்று நினைத்தாலே போதும்)

ஒரு-சாயி திருநாமம் போதும் 
நம் பவ-மாய வினை-யாவும் உடன் சென்று போகும்
ஓம் சாய்ராம்..
(MUSIC)
சொல்லிட மறப்போர்க்கும் தருமே கதி 
என்ன சொல்லினும் மறுப்போர்க்கும் அதுதான் கதி
(2)
குறை சொல்லும் மாந்தர்க்கும் தருமே கதி 
பெரும் உரை நிகழ்த்தும் குருமார்க்கும் அது தான் கதி
ஒரு-சாயி திருநாமம் போதும் 
நம் பவ-மாய வினை-யாவும் உடன் சென்று போகும்
ஓம் சாய்ராம்..
(MUSIC)
ஒருநாமம்  குறை போக்கும் திரு சேர்க்குமே 
 பவ மருந்தானத் திருநீறு ஆறாகுமே
(2)
திரு நாமம் இசை சேர்த்து நாம் கூறவே 
நம் வினை-போகும் செவி கேட்கும் விருந்தாகுமே
ஒரு-சாயி திருநாமம் போதும் நம் பவ-மாய வினை-யாவும் போகும்
ஓம் சாய்ராம்..
(MUSIC)
பால் போன்ற வெண் தூய்மை அது நல்குமே 
நெகிழ் பாகாக நல் நெஞ்சை அது ஆக்குமே
(2)
மனச்-சோகம் தனைப் போக்கும் திருநாமமே (2)
அது நம்-மூச்சில் சோஹம்-என்..றுருவாகுமே
ஒரு-சாயி திருநாமம் போதும் நம் பவ-மாய வினை-யாவும் போகும்
ஓம் சாய்ராம்..