Showing posts with label என்ன புண்ணியம் செய்தேனோ. Show all posts
Showing posts with label என்ன புண்ணியம் செய்தேனோ. Show all posts

Wednesday, April 22, 2020

198. அன்பே மெய்யாக (என்ன புண்ணியம் செய்தேனோ)



அன்பே மெய்யாகக் கொண்டாயே ஸ்ரீசாயி நாதா
தந்தனை தம் சொல்லாலே ன்னருள் குருவே
 அன்பே மெய்யாகக் கொண்டாயே சாயி நாதா
உன்னருட் பாதங்கள் நடந்து தினம்காட்டும்
அன்பெனும் தரிசனத்தால் வினைஏதும் அண்டாது
காணக் கிடைக்காத அருட்சுடரே ஹேசாயீ
சாயீ.. சாயீ.. . என்னருள் குருவே
அன்பே மெய்யாகக் கொண்டாயே ஸ்ரீசாயி நாதா
தந்தனை தம் சொல்லாலே ன்னருள் குருவே
 அன்பே மெய்யாகக் கொண்டாயே சாயி நாதா
வாடிய பேருக்கு தாயின் மடியைப் போலே
இடர்கொண்டு துடிப்போர்க்கு மருந்தாகும் உன்தேன்சொல்லே
வேறெங்கும் காணாத அன்புருவே ஹேசாயீ
சாயீ.. சாயீ.. . என்னருள் குருவே
அன்பே மெய்யாகக் கொண்டாயே ஸ்ரீசாயி நாதா
தந்தனை இதம் சொல்லாலே என்னருள் குருவே
 அன்பே மெய்யாகக் கொண்டாயே சாயி நாதா
கோள்நாள்கள் எல்லாம்உன்னைக் கண்டு பின்னே செல்லும்
சாயீசா என்றுஉன்தாள் கண்டு நெஞ்சம் துள்ளும்
ஊழ்பட்டு வந்த பந்த பாசமெல்லாம் போக்கி
பரம சத்வமாக்கி மண்ணை பாலிக்கும் அருள் தரவே
அன்பே மெய்யாகக் கொண்டாயே ஸ்ரீசாயி நாதா
தந்தனை இதம் சொல்லாலே என்னருள் குருவே
 அன்பே மெய்யாகக் கொண்டாயே சாயி நாதா
நாமாவளி
பாடுவோமே பேரானந்தமுடனேநாம் சாயிராம் பாதமலர் சூடிடுவோம்
பாடி ஆடிக் கொண்டாடிடுவோம் ஆடி பாடிக் கூத்தாடிடுவோம்
சாயீசா பர்த்தீசா என்று கூவிடுவோம்
சாயீசா ஷிரடீசா என்று கூவிடுவோம்
சாயீசா ப்ரேமேசா என்று கூவிடுவோம்

கலியுக ப்ரேமாவதார சாயி பகவானுக்கிஜெய்