Friday, May 1, 2020

343. எங்கே என் சாயி பிரான்(வந்தேன் தபோவனம் வந்தேன்)



விருத்தம்
ஈரேழ் லோகத்திலும் பொன்பொருள் செல்வத்திலும் 
மாட மாளிகையிலும் உடல் பெறும் போகத்திலும்
ஊண் தரும் சுவை தனிலும் கிட்டாத பேரன்பை 
தானாய் வந்து எனக்களித்த என்அன்னை என்ஸ்வாமி என்சாயி
எங்கே எங்கே நீ எங்கே
------------
எங்கே சாயி பதம் எங்கே (2)
எங்கே என் தாயின் முகம் எங்கே (2)
(எங்கே சாயி பதம் எங்கே)
இனிமேல் நானுயிர் வாழ்வது எப்படி (2)
(எங்கே சாயி பதம் எங்கே)

நீ-மானி..டக்காயம் கொண்டே தினந்தோறும் (2)
இன்பஉலா வந்த திருப்பாதம் எங்கே
(எங்கே சாயி பதம் எங்கே)

நீ-சென்..றதென் பா..பங்களாலா (2)
உன் திருத்தாள் மறைந்ததென் பிழைகளினாலா
(2)
ஏன் சோதனையோ..! ஓ ..ஆ..

 ஏன் சோதனையோ என் வேதனை போதும் (2)
நீ காட்டிய பாதையில் சென்றிடுவேன்-இன்றே 
(2)
எங்கே சாயி பதம் எங்கே
எங்கே என் தாயின் முகம் எங்கே
எங்கே சாயி பதம் எங்கே .. 
எங்கே..!


தீன கருணாகர சாயி பகவானுக்கி-ஜெய்




No comments:

Post a Comment