Friday, May 1, 2020

344. பழகுபழகு சாயிநாமம்(அழகுஅழகு அழகுஅழகு ஐயப்பன் அழகு)



பழகு பழகு சாயி நாமம் சொல்லியே பழகு (2)
அது மாயச் சுழலில் நமைத் தாங்கும் மாபெரும் விழுது (2)
பழகு பழகு சாயி நாமம் சொல்லியே பழகு
(Music)
  அனுதினமும் நாமம் சொல்லி மனதினில் அழுது
அது பனியெனவே உருக நீங்கும் விரைவினில் பழுது
ஐயா வினை விலகாமல் தாக்கிடும் பருந்து (2)
அவன் நாமம் சொல்ல போகும் அது சட்டெனப் பறந்து
(பழகு பழகு சாயி நாமம் சொல்லி நீ பழகு)
(Music)
சொல்லிப் பாடு அவன் புகழை அன்பினில் கசிந்து
அந்த நாம ஜபம் தனைநீயும் பலருடன் இசைந்து
பாடும் நாவில் மணக்குமது அளவினில் சிறிது (2)
வீடுபேற்றை அளிக்கும் அதன் பலமோ பெரிது
(பழகு பழகு சாயி நாமம் சொல்லி நீ பழகு)
(Music)
திக்கெட்டும் புகழ் மணக்கும் சேவையைப் புரிந்து
நம் சாயிபிரான் வகுத்தளித்த பாதையில் நடந்து
நாவாலே சாயி சாயி என மனம் கசிந்து (2)
சொன்னவரின் நோய்போக்கும் நாமத்தின் மருந்து
(பழகு பழகு சாயி நாமம் சொல்லி நீ பழகு)
பழகு பழகு சாயி நாமம் சொல்லியே பழகு
நாமம் சொல்லியே பழகு (2)
சாயி நாமத்தைப் பழகு

சுந்தர வதன சத்ய சாயி பகவானுக்கி- ஜெய்



No comments:

Post a Comment