Friday, May 1, 2020

338. நான் அழுது விடும் கண்ணீர் (நான் ஒழிந்து நீயாக)



நான்அழுது விடும்கண்ணீர் கண்டிலையா
என்-ஆவி நாதனே என்சாயி நாதனே (2)
(2)
 (நான் அழுது விடும்..)
என்ஸ்வாமி சென்றதை என்னவென்று கூறுவேன்
எந்தன்சாயி நாதனே உனைஎன்று காணுவேன்
(நான் அழுது விடும்..)
நாள்தோறும் நான்பாடும் பாட்டினில் பிசகுண்டு (2)
ஆனாலும் அதன்துயரில் குறைவே இல்லை (2)
சொலவொண்ணா துன்பத்தால் தினமும்நான் அழுகின்றேன் (2)
எப்பாடு பட்டும் உன்னைக் கண்டிடவே (2)
அவதரிப்பாய் ஸ்வாமி என்றுஎந்தன் கண்-சொரியும் (2)
நீரினிலே வரும் ஆறுகளே
பிறந்துவிடு ஸ்வாமீ ஞாலகத்தில்
சாயிஉன் வரவால்தான் துயரம் அடங்கும் என்னில் (2) 
திரும்பி வந்தே கண்ணைத் துடைத்திடு வாய்சாயி
திரும்பி வந்தே கண்ணைத் துடைத்திடம்மா தாயே
(நான் அழுது விடும்..)

நாமாவளி
 (கந்தா நின் பாதாரவிந்தம் துணை- நாமாவளி)

பாபா-நின் பாதார விந்தம்துணை (2)
நீதான்-வல் வினைபோக எந்தன் துணை 
கோள்அணுகா துன்பாதார விந்தம்துணை
சிவரூபாஉன் பாதார விந்தம்துணை (2)


நாமாவளி
( குரு த்யாயி- நாமாவளி)

ஹே சாயி ஹே சாயி.. நீ வருவாய் த்வாரக மாயி
ஏனோ-ஏனிந்த சோதனை உன்வரவே போக்கிடும் வேதனை
(ஹே சாயி ஹே சாயி)
குருதேவா வந்திடு நல்ல பாதை தந்தே தந்தெமைக் காக்க
(ஹே சாயி ஹே சாயி)


சகல லோக நாத சாயி பகவானுக்கி – ஜெய்





No comments:

Post a Comment