Tuesday, June 30, 2015

32. நன் மனத் திருப் பவனே (என் மனத்துதித்தவனே)





 
( என் மனத்துதித்தவனே )
 
விருத்தம்
 
ஓதும் சதுர் வேதங்களின் உள்ளே கருவுமாகி
 பிரபஞ்சத்தையும் கடந்து அணுவுமாகி
 ஆதி பரம் பொருள் எனவே காலம் கடந்து
அன்பாகி அங்கிங்கெனாத விதம் எங்கும் நிறைந்த
ஜோதிச் சுடர் வடிவாக உன்னை த்யானத்தில் காண வேண்டி
சாதனை செய்யும் மகா ஞானியர் பலர்
 அவர் எப்பொழுதும் உனை-எண்ணித் தவம் இருப்பரே
_____________________


நன்மனத்..திருப்..பவனே அருள் விரைந்தளிப்பவனே (2)
 இகத்தில்உனையன்றி சிறந்த துணையாய் வேறில்லை ஆண்டவனே (2)
 நன்மனத் திருப்பவனே...
 நிஜத்தில் வந்தவனே சாயி கரைந்திடும் தாயவனே (2)
 எங்கள்-அகத்தில் நிறைந்தவனே சாயி மனத்தில்-தூயவனே (2)
 நித்தம் உன்பாதம் இந்தமண்ணில் நடக்காதா (2)
 சத்திய அவதாரா திரும்பவும் ப்ரேமையில் நீ வா வா (2)
 அப்பனாகநல்ல அன்னையாகபுவி இருந்தவன்நீ சாயி (2)
கூப்பிடும் எங்களின் குரலுக்கு நீயும் செவிகொடுப்பாய்மாயி
வந்திடாய் சாயீசா நீ வந்திடாய் மண்மேலே (2)
உனைஎப்படி மறந்திடுவோம் தினம் நீவரப் பாடிடுவோம்
சத்திய அவதாரா திரும்பவும் ப்ரேமையில் நீ வா வா
விரித்தகுடையென கறுத்தசிகையினில் சிரித்துநின்றவனே (2)
உன்சிறு கரத்தில்உதிர்நல்-நீறில்-வல்வினைகள் எடுத்துக்களைந்தவனும்நீ
சின்மயத்தில் ஆழ்த்திடுவாய் என்மன மதத்தை ஓட்டிடுவாய் (2)
*அகம்பட எளிதாய் அகப்படுவாய் அன்பினில் தெளிவாய் புலப்படுவாய் 
சத்திய அவதாரா திரும்பவும் ப்ரேமையில் நீ வா வா (2)
நீ சர்வமதம்-சம்மதம் என அனைவரயும் அணைத்தாய் (2)
மதமாச்சர்யம் தனைப்போக்கக் கைவரும் அருள்திரு நீறளித்தாய்
சத்திய அவதாரா திரும்பவும் ப்ரேமையில் நீ வா வா (2)
பர்த்..தியிலே உதித்தவா அந்த-ஷிரடி தலத்திருந்தவா
புட்ட பர்த்..தியிலே உதித்தவா அந்த-ஷிரிடி தலத்திருந்தவா
மங்கலத் திருவடி தோன்றிடவா இனியும்-ஏன் தாமதம் அருள்செய்யவா
சத்திய அவதாரா திரும்பவும் ப்ரேமையில் நீ வா வா (2)


நாமாவளி

( ஒம்குருநாதா ஞானானந்தா சத்குரு தேவா குருதேவா)


பர்த்திபுரீசா ஷிரிடி நிவாசா
எங்கள் இறைவா சாயீசா
 


No comments:

Post a Comment