Tuesday, June 30, 2015

33. சாயிராம் மண்மேலே நீ (பச்சை மா மலர்போல் மேனி)

 
( பச்சை மா மலர்போல் மேனி )





சாயிராம் மண்மே..லேநீ பிறந்திடாய் ப்ரேமையிலேநீ
பச்சிளம் குழந்தையேநீ வெளுத்திடும் பாலுன் உள்ளம்
(2)
பொன்னினை நிகர்த்த பாதம் மன்பதை நடந்தே காட்டும் (2)
அன்பினை  பெறவே ஏங்கி அழுகிறேன் இரங்கு-சாயி
பாரிலே துணையும் நீயே இருளிலே ஒளியும் சாயி
வேறிலை இறையும் நீயும் உணர்ந்திட்டேன் எந்தன் ஸ்வாமி
(2)
யாரினி மண்ணிலே பிள்ளை நான் கதறுகின்றேன் (2)
அன்னையே ஹே-சா..யீ..மா இறங்கிடாய் கதி நீ தானே

(or)


ஆரிரோ-ஆரீ..ராரோ என்று-நான் பாடுகிறேனே
அய்யனே உறங்கு-சாயி தேன்-மொழி பேசும்-கண்ணே
(2)
உன்-மலர்க் கண்கள்-மூடி கொஞ்சம்-நீ தூங்கிட நானும் (2)
பாட்டினைப் படித்தேன் கண்ணே அறிவிலாப் பேதை நானே
கூறவோர் கீர்த்தி இல்லை எனக்கு ஓர்-திறமை இல்லை 

சாயி-நின் நாமம்-ஒன்றே சொல்வதே எனது-தகுதி
(2)
கண்மணீ தூங்கிடாய் என்று-நான் பாடுகின்றேன் (2)
 வேருளர் பாடிட-அய்யா என்று-நீ கூறிடாதே


No comments:

Post a Comment