Tuesday, June 16, 2015

7. ஞாலம் காக்க( வள்ளிக்கணவன் பேரை- காவடிச்சிந்து) RECORDED

 


 
( வள்ளிக்கணவன் பேரை/ஞாலம் போற்றும் சீலனடி-காவடிச்சிந்து)
 
ஞாலம் காக்க வந்தசாயி பேரானந்தம் தந்த சாயி (3)
தெய்வங்களின் தெய்வமடி கிளியே (2)

எங்கள்சாயிரா..மனடி கிளியே ..ஸ்வாமியவன்பா..தம்பணி
ஜாதி மத இனமும் இல்லை சாயி நெஞ்சில் பேதம் இல்லை (2)
சர்வதர்ம ப்ரியனேயடி கிளியே (2)
யார்க்குமருள் தெய்வமடி கிளியே யாருமவன் சேய்தானடி (2)

வேண்டிக்கேட்கத் தேவைஇல்லை முகத்துதிகள் தேவையில்லை(2)
ஓடிவந்தே தரும்தாயடி கிளியே (2)
அவனுக்கு இணையாரடி கிளியே தேடாதேநீ கிடைக்காதடி (2)

ஞாலத்தில் நல்லோரெல்லாம் த்யானத்தில் காண்பாரடி (2)
ஆன்மத்தின்பே..ரொளியே..கிளியியே (2)
திங்கள்முடிஈ..சனடி சாயி.. ஈசனுக்குமீ..சனடி (2)
அறிந்துகொள்நீ அவனேஹரி புரிந்துகொள்நீ சிவனும்சாயி (2)
கோடிஜன்மப் ப்ரார்த்தனையே கிளியே (2)
மண்ணில்அவன் வந்ததடி கிளியே ஸ்வாமியவன்பாதம்பணி(2)

நாமாவளி 

குரு நாதா ஆ..குரு நாதா (2) ... குரு நாதா ஆ..சாய் நாதா
கண்ணிருந்தும் உனைக் காண மறந்தேன் குருநாதா ..(குருநாதா..)
நாக்கிருந்தும் உனைப் பாட மறந்தேன் .. (குருநாதா..)
பேச்சிலும் புகழிலும் காலத்தைக் கடந்தேன்.. (குருநாதா..)
சாதுசங்கத்தில் சேரவில்லையே.. (குருநாதா..)

நாமாவளி 

சாயீசா ஆ..சாயீசா (3) 
கண்திறந்து நீ கருணையைப் பொழிவாய் சாயீசா.. (சாயீசா)
நாக்கிருந்து வரும் பேச்சிலும் நீயே சாயீசா.. (சாயீசா)
பாட்டினில் -உந்தன் புகழினைச் சொல்வேன் சாயீசா .. (சாயீசா)
கோது குற்றங்கள் போக்கிட வருவாய் சாயீசா .. (சாயீசா)
 
 
அபேத சக்தி அவதார சாயி நாத மஹராஜ்கி – ஜெய்
 
 
 
 

1 comment:

  1. Sai ram . Excellent effort.
    Even an unknown person about singing namasankeerthanam can sing with this wonderful audio and video with the help of lyrics provided.
    Really wonderful.
    My blessings for giving me chance to perform the pooja.
    All singers voice devaganam .
    Jai Sai ram.

    ReplyDelete