( தமரு மமரும் - திருப்புகழ் )
உருளுமுலகி லுதவி யருள விரைவில் வருக சாயீசா
பொருளும் திருவும் பெறவே வேண்டேன் அருளைப்பொழிகசாயீசா
(2)
உனது பதத்தின் அடியில் கிடைக்கும் பொடியும் போதும் பெருமானே
எனது வினைகள் அழிக்கும் உனது கரத்தில் உதிரும் திருநீறே
(2)
உனது நடையில் விளங்குமழகில் மனதைக் கொடுத்தேன் பெருமானே
உனதுசடையில் விளங்கும்சிகையில் பிறையைக் கொண்ட சிவன்நீயே
(2)
உனது கடைக்கண் ஈரப்பார்வை ஒன்று போதும் பெருமானே
உலகைப் படைக்கும் இறைவா அதுவே பிறப்பைக் கடக்கும் படகாமே

எனதுஎனக்கு என்னும்மனது போகவேண்டும் பெருமானே
நினது நினக்கு என்றுமனது ஆகவேண்டும் அருள்வாயே
பிறகு பிறகு என்று பாதம் பணிதல் விடுத்தேன் பொறுப்பாயே
வருக வருக என்று போதம் அளித்து தடுப்பாய் இறைவா நீ

நாமாவளி
(ஸ்கந்தாநின் பாதாரவிந்தம் துணை )
பாபா-நின் பாதார விந்தம்துணை
நீதான்-வல் வினைபோக எந்தன் துணை
கோள்அணுகா துன்பாதார விந்தம்துணை
சிவரூபாஉன் பாதார விந்தம்துணை (2)
நீதான்-வல் வினைபோக எந்தன் துணை
கோள்அணுகா துன்பாதார விந்தம்துணை
சிவரூபாஉன் பாதார விந்தம்துணை (2)
சகல லோக நாத சாயி பகவானுக்கி - ஜெய்
No comments:
Post a Comment