Monday, September 23, 2019

120. சாயிராம சாயிராம (அன்னை அன்னை அன்னை)


சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2)
சாயிராம சாயிராம என்று சொல்லிப் பாடுவோம்
ப்ரேமசாயி வடிவம் கொண்டு வந்திடப் பண்பாடுவோம்
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2)
நிதம்நிதம் உனைநினைத்து வந்தஅன்னை ஈஸ்வரி
தவம்அவள் மிகப்புரிந்து மண்ணில்வந்த நீஹரி 
சிதம்சிதம் தனில்நிறை விதம்சிறந் தருள்புரி 
பதம்பதம் தனைஎடுத்து இந்தபூமி வாஇனி 
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2)
மதம்கடந்த மானிடப் பிறப்பெடுத்த ஆதவா
சிதம்பரம் தனில்நடம் புரிந்திடும் சதாசிவா
தினம்புலம் நடந்துமே வரம்கொடுத்த மாதவா
கரம்தனைச் சுழற்றியன்பு நீறளித்து காத்தவா 
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2)
ஆறுமாறு கூறுமன்பு மாறுமான சாயிராம்  
காணுமாறு வந்துமண்ணில் யாதுமான தூய்மையாம்
நேரிடாத வாரிடர் களைந்திடும் விநாயகா
ஏடிடா மறைக்கருப் பொருள்நீவேத வித்தகா 
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2)
உரைநடைக் குறைபடா திரும்இறைநீ-சாயிராம்
வரையறைக் ககப்படா திருந்திருக்கும்  ஆண்டவா
கரைபடா மனத்துறை அதில்கரந் திருப்பவா
குறைதிரை இலாதிரும் பரம்பொருள்நீ-சாயிராம்
சாயிராம சாயிராம சாயிராம சாயிராம் (2)
நாமாவளி
(பஜன்-ஜகதம்பிகே ஜெய ஜகதீஸ்வரி )

ஜகதம்பிகே ஜெய ஜகதீஸ்வரி
தாயே பராசக்தி பரமேஸ்வரி
ஜகதம்பிகே ஜெயஜகதீஸ்வரி
மாயே மகா சாயி மகேஸ்வரி
நீயே வினை தீர்க்கும் விஸ்வேஸ்வரி
உனையே சரண் அடைந்தேன் கருணாகரி
அருள்வாயே ஆனந்த லஹரி கௌரி





 

No comments:

Post a Comment