Sunday, May 24, 2020

புட்டபர்த்தி நிவாசா நமோ நம ( நாத விந்து கலாதி நமோ நம ) - சாய் திருப்புகழ்


(ராகம் : செஞ்சுருட்டி மெட்டு N : நாத விந்து கலாதி  நமோ நம)



புட்டபர்த்தி நிவாசா நமோ நம .. கேட்ட வரம் தரும் ஈசா நமோ நம 
மாய மானுஷ வேஷா நமோ நம..  அருள் செய் சாயீசா..!

விண்ணைப் படைக்கின்ற  மெய்யான சிறப்பு நீ .. மண்ணில் வருகின்ற  தெய்வத்தின் பிறப்பு நீ
கண்ணில் காணாது சென்றாலும் என்றும் நீ… நெஞ்சில் உறைவாயே ..!

வேதமந்திரம் இசையோடுஓதலால் காதில்தேன்வந்து பாய்கின்ற தாதலால்
ஈர நெஞ்சாலே  யாம்  கொண்ட காதலால்  .. காட்சியும் கொடுப்பாயே..!

வேத மந்திரம் ஓதாத  போதிலும்   .. 
போதன் உன்பதம்  நினையாத நாளிலும்
பேதம்  மனதினில் இல்லாத சேவையால் .. மகிழ்ந்தே அருள்வோனே..!

மனதின் நோய்களைத் தீர்க்கின்ற தெய்வம் நீ .. 
உடலின் நோய் தீர்த்து அணைக்கின்ற தாயும் நீ
எனது நான் என்ற எண்ணத்தைப்  போக்கு நீ .. உன்னில் சேர்ப்பாயே  ..!

உயிரின் பசிபோக்கும் அன்னத்தின் பூரணி .. அறிவின் பசிதீர்க்கும் சரஸ்வதி தேவி நீ 
விரைவில்  கிடைக்காத வானத்தின் ஜோதி நீ.. எம்முள் இரு தாயே ..!

பார்புகழ் பாரதம் தோன்றிடும்  தெய்வம் நீ.. 
ஓர் இணை இல்லாத திறத்திலே மன்னன் நீ 
பாரினில் நீர் தந்து காத்திடும் மேகம் நீ  .. தாகம் தீர்த்தாயே ..!

அண்டம் படைத்திங்கு எல்லாமு மானவன் 
அணுவின்  உள்ளேயும் அணுவேநீ  ஆனவன்
தொண்டரின் உள்ளத்தில் உறைகின்ற  ஆண்டவன் .. எம்மைக் காப்பாயே ..!

தோன்றி வளர்கின்ற சுயமான ஜோதிநீ .. 
என்றும் உறைகின்ற விதமான  ஆதி நீ
மண்ணில் பிறக்கின்ற  யாவிலும் உயிரும் நீ .. உயிரின் உயிர் நீயே   ..!

போற்றி போற்றி நின் பாதங்கள்  போற்றியே .. 
வெற்றி வெற்றி எம்  நெஞ்சில் நீ நின்றிட 
சாற்றி சாற்றிப்  பறை செய்வோம் நாங்களே .. அருள் செய்  சாயீசா..!
(2)
அருள் செய்  சாயீசா..அருள் செய்  சாயீசா..அருள் செய்  சாயீசா..!



  Saayi Thiruppugazh ( Naadha Bindh Kalaadhi Namo Nama )


Puttaparthi nivaasaa namo nama.. ketta varam tharum eesaa namo nama
maaya maanusha veshaa namo nama .. Arul Sei saayeesaa ..!


Vinnaip padaikkinra meyyaana sirappu nee.. mannil varuginra dheivatthin pirappu nee
Kannil kaanaathu senraalum enrum nee.. nenjil uraivaaye ..!

Vedha manthiram isaiyodu odhalaal .. Kaadhil thenvanthu paaiginra dhaadhalaal
Eera nenjaale naam konda kaadhalaal .. Kaatchiyum koduppaaye

Vedha mandhiram odhaadha podhilum .. Bodhan unpadham ninaiyaadha naalilum
Bedham manadhinil illaadha sevaiyaal .. magizhnthe arulvone

Manadhin noigalaith theerkkinra dheivam nee .. Udalin noi theertthu anaikkinra thaayum nee
Enadhu naan enra ennatthai pokku nee.. unnil serppaaye

Uyirin pasipokkum annatthin poorani .. arivin pasi pokkum saraswathi dhevi nee
viraivil kidaikkaadha vanatthin jothi nee.. emmul iru thaaye

Paarpugazh bhaaratham thonridum dheivam nee..oariNai illaadha thiratthile mannan nee
Paarinil neer thanthu kaatthidum megam nee.. dhaagam theertthaaye..!

Andam padaitthingu ellaamu maanavan anuvin ulleyum anuve nee aanavan
Thondarin ullatthil uraiginra aandavan .. emmaik kaappaaye ..!

Thonri valarginra suyamaana sothi nee .. enrum uraiginra vithamaana aathi nee
Mannil pirakkinra yaavilum uyirum nee.. Uyirin uyir neeye ..!

Potri potri nin paadhangal potriye.. Vetri vetri em nenjil nee ninrida
Saatri saattrip parai seivom naangale.. Arul Sei Saayeesaa..!
Arul Sei Saayeesaa..! (2)




2 comments:

  1. நவீன அருணகிரி அவர்கள் நீடூழி வாழ்க வளமுடன். நின் சேவை தொடரட்டும். சாய்ராம்.

    ReplyDelete
  2. சாய்ராம் 🙏 அருமையான வரிகள். இதை எழுதியவர்க்கும், இதை கற்பித்த மகளிர்க்கும் வந்தனங்கள். இதை பாட வைத்ததற்கு சாயி பகவானுக்கு கோடி வந்தனங்கள்.

    ReplyDelete