ஓம் ஸ்ரீ சாயிராம்
பகவன் நாம ஸ்மரணை
" பகவன் நாம ஸ்மரணையால் எல்லா கஷ்டங்களும் நொடிப் பொழுதில் விலகிவிடும். கடவுளின் நாம ஸ்மரணை ஒன்றே எல்லா கஷ்டங்களுக்கும் விடி மோட்சம். கடவுளின் நாமத்தை விட வலிமை வாய்ந்தது எதுவும் கிடையாது. நாம ஸ்மரணை மூலம் இறைவனின் வல்லமையை நினைத்த மாத்திரத்தில் பேரானந்தம் கிட்டும்.தியானம் போன்ற பல வழிபாட்டு முறைகள் மற்ற யுகங்களுக்கு விதிக்கப் பட்டிருப்பினும். கலியுகத்தில் நாம ஸ்மரணையே மோட்சத்தை அளிக்க வல்லது. "
-பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா
சாயி பகவானின் கீர்த்தியைத் தவிர வேறொன்றும் இல்லாத சாயி நாம சங்கீர்த்தனம் தமிழில் செய்யப்பட்டது.
த்ரேதா யுகத்தின் தெய்வத் திருத்தோன்றலாகிய சீதா ராமனின் திருக்கல்யாண வைபவத்தில் கலியுக அவதாரமாகிய சாயி ராமனின் நாம மஹாத்மியத்தையும் , கல்யாண குணங்களையும்,லீலா விநோதங்களையும் போற்றிப் பாடும் பேற்றினை அளித்த பகவானின் திருப் பாதங்களைப் பணிந்து, வாருங்கள் சாயி நாம சங்கீர்த்தனத்தை ,சாயி ராம நாம சங்கீர்த்தனத்தை இசைத்து பகவானின் அருள் மழையில் நனைவோம்..!
No comments:
Post a Comment