Tuesday, June 9, 2015

1. புவி இறங்கிவா (விழி கிடைக்குமா)

விருத்தம் (அழுந்தொரும்)
எழுந்திடும் துயரில்நெஞ்சம் ..நீ இலாது வாடிவாடி
எழுத்தினில் கொடுக்கும் இப்பண்..தினம் பாடும் போது சாயி
இறங்கிடு யார்க்கும் தெய்வம்..எங்கள் தாய் எடுப்பாய் மண்ணில் யாக்கை
இப்புவி உலாவ என் சாயி மாதா..வா நீ ..
சாயி மாதா வாநீ..சாயி மாதா வாநீ..சாயி மாதா வாநீ
____________
புவிஇறங்கிவா நீவாவா சாயிமா.. (2)
உலகத்தில் நீவேண்டும் விரைந்து நீயும்வா
 
இவ்வுலகத்தில் நீவேண்டும் விரைந்து நீயும் வா
புவிஇறங்கிவா நீவாவா சாயிமா
உலகத்தில் நீவேண்டும் விரைந்து நீயும்வா
 
நிலையாத புவிமீது உயர்வேது சுகமும்ஏது?
துஞ்சாத உலகத்தில் எழில் ஏதம்மா?
நீ துஞ்சாத உலகத்தில் எழில் ஏதம்மா? (3)
புவிஇறங்கிவா நீவாவா சாயிமா
உலகத்தில் நீவேண்டும் விரைந்து நீயும்வா
உன்பாசம்ஓர் விலைபொருளல்ல கடைகிடைக்க (2)
ஓம்காரக் குரல்மீண்டும் செவிகேட்குமா
உன் ஓம்காரக் குரல்மீண்டும் செவிகேட்குமா
நிஜமான அன்புஎங்கே இணையுண்டோ உனக்கும்இங்கே
விழியாற்றுப் பெருக்கில்மனம் இறங்குசாயிமா
என்விழியாற்றுப் பெருக்கில்மனம் இறங்குசாயிமா(3)

புவிஇறங்கிவா நீவாவா சாயிமா
உலகத்தில் நீவேண்டும் விரைந்து நீயும்வா
 
வாடிநெஞ்சம் நான்துடித்தேன் தேடிஉந்தன் சரண்அடைந்தேன் (3)
வாஇன்று எனக்காகப் பார் மீதிலே (2)
நிலைக்காத உலகம்..தனில் இனிப்பேது இன்பம்ஏது
தயங்காதே சமயம் இது நீ பிறந்துவா
நீதயங்காதே சமயம் இது நீ பிறந்துவா (2)

புவிஇறங்கிவா நீவாவா சாயிமா
உலகத்தில் நீவேண்டும் விரைந்து நீயும்வா

நாமாவளி
( மெட்டு: அபார மஹிமா ஹோய் )

 வராமல் விடுவேனோ ப்ரேமையைத் தராமல் விடுவேனோ
சேயாகஉலகில் தாயேநீபிறந்து தராமல்விடுவேனோ
ப்ரேமையைத் தாராமல் விடுவேனோ
பர்த்தியில் இருந்தவனே தினம்தினம் தரிசனம்கொடுத்தவனே
தினம்தினம் தரிசனம்கொடுத்தவனே
சத்தியப் பிறப்பிடமே எங்கள் மனம்உந்தன் இருப்பிடமே
எங்கள் மனம்உந்தன் இருப்பிடமே
வராமல் நீவராமல் நீநீ வராமல் விடுவேனோ  
ப்ரேமையைத் தராமல் விடுவேனோ
 சேயாகஉலகில் தாயேநீபிறந்து தராமல்விடுவேனோ 
ப்ரேமையைத் தராமல் விடுவேனோ


ஸ்ரீ சத்யசாயி பகவானுக்கி – ஜெய்

 

No comments:

Post a Comment