Thursday, June 18, 2015

25. வழி கிடைத்ததே (விழி கிடைக்குமா)



 
 
 (விழி கிடைக்குமா))


Click here to listen to Master Karthik Gnaneshwar


வழி கிடைத்ததே  நெஞ்சில் ஒளி பிறந்ததேà (2)
சாயீசன் அவ..தரிக்க அருள்கிடை..த்ததே
சத்யசாயீசன் அவ..தரிக்க அருள்கிடைத்ததே
(வழிகிடைத்ததே..)
அழுக்கான மனதாகும் பளிங்காகத் தூய்மைகொண்டு
நெஞ்சத்தில் சாயீசன் வரும்போதிலே
உன்நெஞ்சத்தில் சாயீசன் வரும்போதிலே(3)
(வழிகிடைத்ததே..)
நம்பாவம்போம் அந்தசாயீசன்அருள்இருக்க (2)
(மிக)உயர்வான நிலைவந்து நமைச்சேருமே (2)
நிஜமேநல்வடிவுகொண்டு நிஜமாகவந்த சாயி
(உன்) வழிபார்த்துக் காத்..திருப்போம் சீக்..கிரம்நீவா  (4)
(வழிகிடைத்ததே..)
கோடிஜன்மப் புண்ணியத்தால் சாயிஉந்தன் சரண் அடைந்தோம் (3)
எம்தேவை வேறென்ன பார்மீதிலே (2)
நினைக்காத நாளில்லை ஸ்வாமிஉந்தன் பதம்பணிந்து
நினைக்காமல் அருளைத்..தரும்  தந்தை யல்லவா
நீ நினைக்காமல் அருளைத்..தரும்  தந்தை யல்லவா
நீ நினைக்காமல் அணுவும் இங்கு அசைந்து ஆடுமா
(வழிகிடைத்ததே..)

நாமாவளி
(அபார மஹிமா)

சாயீசன் பேர்பாடு மனதினில் சாயீசன் பேர்பாடு
சாயீசன் பேரில் பாவங்கள்போகும் சாயீசன் பேர்பாடு..
கனிந்துநீ சாயீசன் பேர் பாடு
 அழுதிடக் காண்பதில்லை சாயிராமன் கண்ணீரை கொடுப்பதில்லை
சாயிராமன் கண்ணீரை கொடுப்பதில்லை
பழுதில்லையே நாமெல்லாம் அவனைக் கடவுளாய்க் கொள்வதிலே
அவனைக் கடவுளாய்க் கொள்வதிலே
சாயீசன் சத்யசாயீசன் சத்யசாயீசன்பேர்பாடு மனதினில் சாயீசன் பேர்பாடு
 சாயீசன் பேரில் பாவங்கள்போகும் சாயீசன்பேர்பாடு..சத்ய சாயீசன் பேர்பாடு




No comments:

Post a Comment