Monday, August 31, 2015

66. சாயி பிரான்..... வரும் நாளாம் ( காற்றினிலே வரும் கீதம்) ***



( காற்றினிலே வரும் கீதம் )


சாயி பிரான்..... வரும் நாளாம்.. சாயி பிரான் (விருத்தம்)
(Short Music)
சாயி பிரான்..... வரும் நாளாம்.. இன்று
சாயி பிரான் வரும் நாளாம்
மண்ணில்நடந்திடும் அவன்அருள்பாதம் கொல்லும்வினைசென்றுஓடும்
சாயி பிரான் வரும் நாளாம்
பட்ட துயர்கள் ஒழிந்திடப்போகும் அவனொளி தோன்றுவதாலே
கேட்டவரங்கள் எளிதேகொடுக்கும் அன்னையல்லவோ சாயி
அன்பினிலே..அன்பினிலேதன் மடியினில்சேர்த்து இதமளித்திடும் தெய்வம் 

சாயி பிரான் வரும் நாளாம்
 (MUSIC)

இருள்போக்கிடும் காலைக்கதிரும் வெட்கும் அவன் ஒளிமுன் 

ஞானமதைநம் ஆராவமுதன் அள்ளிவழங்கிடுவான்
ஆ..யர்பாடி கண்ணனும்சாயி இமயப்-பிறைசிவன்-சாயி
சாயி பிரான் வரும் நாளாம் (2)
பொல்லாதநெஞ்சம் அவன்வரக்கனியும் உலா..விடும்இறைசா..யி (2)
ஞாலம்கடந்த தூயவன்சாயி அவன்ஆண்ட..வன்தான் (2)
பாடிடுவோம்...
பாடிடுவோமவன் கருணையை எண்ணி கனியுமாம் அவன் உள்ளம்

சாயி பிரான் வரும் நாளாம் (2)
சாயி பிரான்.....

No comments:

Post a Comment