Thursday, February 11, 2016

89. இந்த பூமியில் அவதரித்து நீ ( துன்பம் நேர்கையில்)



இந்த பூமியில் அவதரித்துநீ அன்புகாட்ட மாட்டாயா 
எமக்கன்பு காட்ட மாட்டாயா
அன்பிலா நெஞ்சை.. நல்லன்பிலா நெஞ்சை
ஊடுருவிநீ மாற்றம் செய்ய மாட்டாயா 
ஸ்வாமீ மாற்றம் செய்ய மாட்டாயா
சாயீ… மாற்றம் செய்ய மாட்டாயா
( இந்த பூமியில் ..)
பண்பும் எளிமையும் சூழப் பாரிலே (2)
வாழ்வில் ஒளியைச் சேர்க்க எம் வாழ்வில் ஒளியைச் சேர்க்க நீ
இன்றே நாட்டிலே உதித்துன் குரலினால் பாடிக்காட்ட மாட்டாயா
ஸ்வாமீ... பாடிக்காட்ட மாட்டாயா
சாயீ… பாடிக்காட்ட மாட்டாயா
( இந்த பூமியில் ..)
!..வரமிதென்று யாம் இரந்து நின்றோமே குறையிலாது இப்போது (2)
இறைவனாம்உன் திருக்குரலிலே ஒருபண்
அருள் இறைவனாம்உன் திருக்குரலிலே ஒருபண் + 
(Swamy’s Bhajan)
“மானஸ பஜரே குரு சரணம் 
துஸ்தர பவ சாகர தரணம்”
எனக் குரலிலே ஒருபண் 
அருள் இறைவனாம்உன் திருக்குரலிலே ஒருபண் 
ஸ்வாமீ... பாடிக்காட்ட மாட்டாயா
சாயீ… பாடிக்காட்ட மாட்டாயா
( இந்த பூமியில் ..)
!..உறவிதென்றுமே பிற மதமிதென்றுமே உலகில்கண்ட பேதம் (2)
இறைவனாம்உன் திருக்குரலிலே ஒருசொல்
கூறி மாற்ற மாட்டாயா
நீ தூய்மையூட்டி எமைஈன்ற எம் உயிர் அன்னையாக மாட்டாயா
உயிர் அன்னையாக மாட்டாயா..
ஸ்வாமீ உயிர் அன்னையாக மாட்டாயா
சாயீ… உயிர் அன்னையாக மாட்டாயா
( இந்த பூமியில் ..)

No comments:

Post a Comment