Thursday, June 18, 2015

23. ஷிரடி சாயி சத்ய சாயி (எண்ட கானி நீட கானி)




 
 
(எண்ட கானி நீட கானி)
 
 ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேமரூப சாயி

ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேமரூப சாயி
எம்குருவாய் உன்வருகை மூன்றாகுமே மூன்றாகுமே
(3)

மூன்றாகுமே மூன்றாகுமே மூன்றாகுமே
விண்ணுமாகி மண்ணுமாகி எங்கும் நிறை ப்ரம்மமாகி
எண்ணுகின்ற நெஞ்சில்ஒளி தந்திடுவான்சாயி
(2)
பாதம்பட்ட இடமெல்லாம் போதம்தந்து அருள்தந்து
பாவம்போக்க மண்ணில்வந்த நிஜதெய்வம்சாயி
(2)
நிஜதெய்வம்சாயி.. நிஜதெய்வம்சாயி.. நிஜதெய்வம்சாயி

சீஎனாது போஎனாது அணைக்கின்ற தந்தைசாயி
தேடிவந்து காக்கின்ற அன்னை எங்கள் சாயி
(2)
ஏன்எனாது எதற்கெனாது கேட்டவரம் தருகின்ற 
காமதேனுவேநம் நிஜதெய்வம் சாயி நிஜதெய்வம் சாயி
(2)
நிஜதெய்வம்சாயி..


ஊழில்படும் பேதைகளும் தவம்புரியும் ஞானியரும்
சாயிபதம் பணிந்திடவே பெற்றிடுவர் மோட்சம்
(2)
கல்விதரும் செல்வம்தரும் வேண்டும்வரம் யாவும்தரும்
தெய்வம்சாயி அதனிடத்தில் கேட்கவேண்டுமோ கேட்கவேண்டுமோ

(2)
கேட்கவேண்டுமோ

 
ஷிரடிசாயி சத்யசாயி ப்ரேமரூப சாயிஎம்குருவாய் உன்வருகை மூன்றாகுமே மூன்றாகுமே
(3)
 





நிஜதெய்வம் சாயி நிஜதெய்வம் சாயி

 

 
ஷிரடி சத்ய ப்ரேம சாயி பகவானுக்கி - ஜெய்
 
 
 
 
 


No comments:

Post a Comment