Sunday, July 5, 2015

46. வந்திடு வந்திடு வந்திடு சாயி ( என்றும் என் நெஞ்சத்தின் )

Click here to listen to the Song
 
 
( என்றும் என் நெஞ்சத்தின் )

விருத்தம்
தானாய் வந்திட்ட பரம்பொருள்சாயி
மனிதனாய்வந்த வேடத்தே
தேனாம்அவனின் குரலமுதே
எழுதாவேத மெய்ப்பொருளே
தாயாம்சாயி கருணையிலே
பேரானந்தத்தின் வடிவம்
இறைதான்அந்த சாயிநாதன்
அவன் திரும்ப அவதரிக்க
நாம்அவனைத்துதித்து பதம்பணிவோம்
___________



வந்திடுபூமியில் வந்திடுசாயி கண்டிடவேண்டுமுன் பொன்மலர்ப்பாதம்
பர்த்திபுரீசா ஷிரிடிநிவாசா சாயீசாநீ வாவாவா
பர்த்தியில்பிறந்தாய் ஷிரிடியில்இருந்தாய் ப்ரேமையிலேநீ வாராய் தாயே (2)
உண்ணும் உணவும் பருகிடும்நீரும் உன்போல்தருவார் வேறார்தாயே?
என்கடன்என்பது அன்பினில்சேவையே என்றேசொன்னாய் அன்பின்தாயே
வந்திடுபூமியில் வந்திடுசாயி கண்டிடவேண்டுமுன் பொன்மலர்ப்பாதம்
பர்த்திபுரீசா ஷிரிடிநிவாசா சாயீசாநீ வாவாவா (2) (Chorus)
சாயீசா உந்தன் சொல்லொன்றே
சாயீசா உந்தன் அன்பின்சொல்லொன்றே
வினைபோக்கும்நல்ல அமுதாய் ஆகும்
த்வாரகமாயி உன்பதம் ஒன்றே பாபங்கள்யாவும் போக்கிடுமே
சாயீசாநீஎன் தந்தையும் தாயும்
சாயீசா நீஎன் தந்தையும் தாயும் நல்வழிகாட்டும் குருவானாயே
நல்வழிகாட்டும் குருவானாயே
வந்திடுபூமியில் வந்திடுசாயி கண்டிடவேண்டுமுன் பொன்மலர்ப்பாதம்
பர்த்திபுரீசா ஷிரிடிநிவாசா சாயீசாநீ வாவாவா (2) (Chorus)

பர்த்திபுரீசா வாவாவா
ஷிரிடிநிவாசா வாவாவா
(3)
சாயி வாவா பாபா வா வா 
 
ஷிரடி பர்த்தி ப்ரேம சாயி பகவானுக்கி - ஜெய்
 
 
 
 


 
 


No comments:

Post a Comment