சொல்லினிலன்பைக் குழைத்துக் கொடுத்தனை சாயிராம் சத்யசாயிராம் (2)
அந்த சொற்பதம் கேட்டிட நெஞ்சு துடிக்குது சாயிராம் சத்ய சாயிராம் (2)
வல்வினை மாயை உடைக்குமுன்தாள்என்று காணுவேன் என்றுகாணுவேன் (3)
என்றுஏங்கிமனம்படும் வேதனை தின்னுதுவேதனை (என்)மன வேதனை
கல்லினையொத்தக் கடிய மனத்தினை ஆக்கினாய் ஒரு பாகுமாய் (2)
உந்தன் அற்புதமாயிரம் காட்டி மகிழ்த்திட ஓடிவா மண்ணிலாடவா (2)
வல்வினை-ஓட்டிநல் சத்தை-வழங்கிடும் நீறினைத் திருநீறினை (2)
ஒரு மானிடக் கோலம் தரித்துக் கரமிட்ட சாயிராம் சத்ய சாயிராம் (2)
புவிமீண்டும் வா நீ மீண்டும் வா (2)
நாமாவளி
( வா வா முருகய்யா வடிவேல் அழகா )
வாவா சாயீசா வருவாய் அழகாய்
ததா திருநீறாய் திருபர்த்தி ராயா ( வாவா சாயீசா)
உன் பாதமேதான் தரும்சக்தி மேலாய்
என்கீதம் கேளாய் சத்யசாயீசா
No comments:
Post a Comment