Monday, February 22, 2016

96. விதி மாற்றிடவே (விகிதாகில சாஸ்த்ர-தோடகாஷ்டகம் )



விருத்தம் 
(குருர்நாம் நாமஹிம் நாச)
 
சாயிராம் பார் உய்ந்து மேலோங்க  வந்திடாயோ க்ருபாநிதே  (2)
உனைப்போல குரு வேறாரோ  கடைத்தேற தயாநிதே 

___________

(The following portion is aligned to the second video above as KARAOKE is available for that)


விதிமாற்றிட வே வரு வாய் உலகே வழி காட்டிடுவாய் குரு..வாய் இருந்தே
(2)
இகமேல் துணை-வே..றிலையே-சாயீ  அருள் தரும்-குரு-உன் பதமே
சரணம் 
(2)

கருணாமுதமாகியே பாரளிப்பாய் பவசாகர-துக்க விமோசனமும் 
(2)

இசை யோடுமுன் தரிசனம் தாசாயிராம் அருள் தரும்-குரு-உன் பதமே சரணம்  
(2
உளதாய்-இலதாய் சிறிதாய்ப்-பெரிதாய் நிஜமாய்-ஜகத் காரண மானவனே 
(2)
இறையே ஸ்திரபுத்தி விவேகத்துடன் 
அருள் தரும்-குரு உன் பதமே சரணம் 
(2) 
 ப்ரம்மபரமசிவா ..

ப்ரம்ம-பரமசிவா நீமாலல்லவா யேசு புத்தஜொராஷ்ட்ர-அல்லாவல்லவா 
(3)
மமகாராமும் மோகமிலா சிதத்தின் அருள் தரும்-குரு உன் பதமே சரணம் 
(2)
சுடுதேவினையே என்றுதான் விடுமோ என தினம்மனம் சஞ்சலமாகியதால்
(2)
அதிவிரைவிலிதம் தரஅவதரிப்பாய்

அதிவிரைவிலிதம் தரஅவதரிப்பாய் அருள் தரும்-குரு உன் பதமே சரணம் 
 (2)
ஜகத்தின் பொருளும் ஒளிகூட்டிடுமோ சுகபோகமும் தான்வழி காட்டிடுமோ
(2)
அறிவாய் மனிதா இதை என்றகுரு 
அருள் தரும்-குரு உன் பதமே சரணம்  
(2)
முனிபுங்கவர் சென்றடர் கானகத்தே தவத்தால் மனத்தால் உனைத்தேடிஒளி
(2)
தருவாய்என த்யானத்தில் வேண்டுவதே 
அருள் தரும்-குரு உன் பதமே சரணம்
 (2)
உதிப்பாய் சாயிமா ஜகம்வந்துஉலா..விடுகெஞ்சிடும் சேய்களை அள்ளிஎடு
 (2)
 இதம் தந்திட ஓடி அம்மாவருவாய் 
அருள் தரும்-குரு உன் பதமே சரணம்  
(2)
அருள் தரும்-குரு உன் பதமே சரணம் (2)

No comments:

Post a Comment