Thursday, April 30, 2020

265. சாய்ராம் சொல்லி (கண்ணன் சொன்னதென்ன-HaridassGiri Swamigal)



சாய்ராம் சொல்லிச் செய்த சேவையினை
நாம் தினம்புரிவோம் நம் வாழ்க்கையிலே
(2)
சாய்ராம் சாய்ராம் சாய்ராம் சொல்லிச் செய்த சேவையினை
நாம் தினம்புரிவோம் நம் வாழ்க்கையிலே

நல்ல நெஞ்சம்-மற்றும் நேசக்கரம் (2)
கொண்டு புரியும் செயலே-சேவை யாகுமென்றே
(2) 
சாய்ராம் சாய்ராம் சாய்ராம் சொல்லிச் செய்த சேவையினை
நாம் தினம்புரிவோம் நம் வாழ்க்கையிலே
அவன் பெயரைச் சொல்லி பஜனை செய்வோம் 
அது வழங்கிடும் நெகிழ்ச்சியில் சேவை செய்வோம்
நாம் எதைச்செய்தாலும் அன்புகொள்வோம்
நம் சாயிராம் நாமத்தைத் துணை கொள்ளுவோம்  
சாய்ராம் சாய்ராம் சாய்ராம் சொல்லிச்செய்த சேவையினை
நாம் தினம்புரிவோம் நம் வாழ்க்கையிலே


நாமாவளி
ஹே-சத்ய-சாயி ஸ்ரீ-சத்ய-சாயி ஹே-சத்ய-சாயி சாயி சாயி 







No comments:

Post a Comment