வேறெவரைப் போற்றிடுவேன் வேண்டிவரம் கேட்டிடுவேன்
பூவுலகை நாடிவந்தே சாயீசா நீஅருளேன்
சாயீசா நீஅருளேன்
(2)
ப்ரேமையை வழங்கிட்ட என்தந்தை நீ தானே
நானும் உண்ண நாடிவந்தே தந்தாயே என்தாயே (2)
அய்யா வேறெவரைப் போற்றிடுவேன்
அறிவினை அளித்துபின்னால் அதிலாயிரம் கற்பனை தந்தவனே (2)
நாதா உன்னைப் பாடிடவே என்னை-ஆயத்தமாய் ஆக்கிவிட்டாய்(2)
ஆயத்தமாய் ஆக்கிவிட்டாய் (2)
ஞானம்கூடி ஆடச்செய் கனிந்துதவம் செய்யச்செய் (2)
த்யானம்தனில் நானும்உந்தன் திருக்காட்சி காணச்செய் (2)
வேறெவரைப் போற்றிடுவேன் வேண்டிவரம் கேட்டிடுவேன்
மலரை நாண் உறச்செய்யும் சாயீசா உன் நெஞ்சு (2)
மகன்நான் அதனில்தூங்க ஏங்கும்ஓர் இளம்பிஞ்சு (2)
வேறெவரைப் போற்றிடுவேன் வேண்டிவரம் கேட்டிடுவேன் (2)
காசில்லை-செல்வம்இல்லை பட்டம்பதவி வேண்டவில்லை(2)
சாயீசா உன்னருளை நீ தருவாயே என்றும்
வேறெவரைப் போற்றிடுவேன் வேண்டிவரம் கேட்டிடுவேன் (2)
படிப்பாலும் முனைப்பாலும் அடைவேனோ-நான்கதி (2)
உன்பதம் நினைப்பன்றி வேறுண்டோ பெரும்நிதி (2)
வேறெவரைப் போற்றிடுவேன் வேண்டிவரம் கேட்டிடுவேன் (3)
நாமாவளி
ஓம்-சாயி-ஓம் (ஓம் சக்தி ஓம் பரா சக்தி ஓம்-நாமாவளி)
ஓம்-சாயி-ஓம் அம்மா-சாயி-ஓம்
மாதா சாயி பரா சக்திக்கி-ஜெய்
No comments:
Post a Comment