Thursday, April 30, 2020

276. ஓமென்று எழும்(நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட)



சாயீச..சாயீச வாவாசாயீசா
வாவாசாயீசா சாயீச..சாயீச
(2)
ஓமென்று எழும்வேத கோஷங்கள் கேட்க
கண்கண்ட வெகுதூரம் தலைகளே ஆட

பக்தர்கள் அமர்வரே ஆவலும் மீற 
சாயிராம் அநுபூதி தரிசனம் காண 
(2)
எப்போதிதைப் போலே தரிசனம் பெறுவோம்
இன்னமுமுன் தாமதமேன் சாயீ பிரானே 

அப்போது இவ்வுடலில் நானுமிருப்பேனோ
ஆகையால் இவ்வுலகம் வாவா-இப்போதே 
(2)
வாவா-இப்போதே (2)
ஞானவடி..வானவனே நீ நாடு பாரை 
இன்றுவரை அன்புதர யாருமுன்னைப் போலே
ஞாலம்தனில் வரவில்லை ஆகையி..னாலே
ஏன் வானில் தங்குறாய் அங்கென்ன வேலை 
அங்கென்ன வேலை (2)

அன்பேஅன்பே என்று அழைப்பாயே தினமே
உன்னிடை வாழ்ந்தநாள் எங்கள்பாக்..கியமே 
(2)
பாபாஉன் பதம்காண ஏங்குகிற மனமே 
நீ வாராமல் அமையாது வந்திடுஇக் கணமே 

நாமாவளி

சாயீச..சாயீச வாவாசாயீசா (n)
வாவாசாயீசா (n)
சாயீச ஈசா (n)

கலியுக அவதார சாயி பகவானுக்கி-ஜெய்





No comments:

Post a Comment