Monday, May 18, 2020

618. உள்ளத்துக்குள் உள்ளவா(வெள்ளிமலை மன்னவா)- Interpretation


உள்ளத்துக்குள் உள்ளவா நாதன்-நீ அல்லவா

ஒவ்வொரு ஜீவனிலும் உள்ளத்தையும் தாண்டி ஆத்மா வாகவும் சகல ஆத்மாக்களுக்கு நாதனாகவும் உள்ளவனே

 

எல்லோர்க்கும் சொந்தமாய் அன்புக்கரம் தந்தவா

ஒவ்வொரு உயிரிலும் அந்தராத்மாவாக விளங்கி , மன சாட்சி என்ற பெயரில் தர்ம வழியினின்று பிறழாமல் இருக்க உதவிக்கரம் நீட்டுபவனே

 

ஆயிரங்கள் இருந்துமென்ன  ஆள் பலத்தால் அடைவதென்ன

யோகத்தில் முன்னேறி ஆயிரமாயிரம் மனங்களைக் கவரும் சித்துக்களைப் பெற்று என்ன பலன், அப்படி இல்லையென்றாலும் வெறும் உடல் பலம் என்ற அளவில் முன்னேற்றம் அடைந்தும் என்ன பலன்,

இறைவனாகிய சாயி உன் பதம் த்யானத்தில் தோன்றி மறைகின்ற பட்சத்தில்.

யோகத்தில் தோன்றும் இறைக்காட்சி முதிர்வடையும் வரை, தோன்றி தோன்றி மறையும்.அப்போது யோகிக்கு இப்படிப்பட்ட ஏக்கமும் Frustrationம் , வருவது இயல்பு

சேயின் குரல் கேட்டு உன் திருமுகத்தைக் காட்டு

இவ்வாறாகப் புலம்பும் சேயாகிய என் குரல் கேட்டு திரும்ப உன் திருமுகக் காட்சியை சத்சித்தானந்தமாய் காட்டுவாயாக.

 

காலம்-மிக ஆச்சு உன் திருக்குரலைக் கேட்டு

இறைவன் ஓம்காரக் குரல் யோகத்தின் ஆரம்பத்தில் இசைக்கருவிகளின் ஒலிகளுக்குப் பின் கேட்கும்.

பிறகு விட்டு விட்டு வரும் இறைக் காட்சிகளின் போது ஓம்காரநாதம் மறைந்து விடும். நாத ப்ரம்மத்தை, ஜோதிஸ்வரூபமாக விட்டு  விட்டுக் காணுதல் ஏற்படும். 

விட்டு  விட்டுத் தோன்றும் காட்சி மறையும்போது , காட்சியும் இல்லை ஓம்காரக் குரலும் கேட்டு காலம் மிக ஆச்சு என்று யோகியின் உள்ளம் தவிக்கும்




No comments:

Post a Comment