Thursday, September 24, 2020

622. தாயுமாகிடும் ஈசன் (வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்) **

 


தாயு..மாகிடும் ஈசனும் சாயி
மூன்று தேவியர் ரூபமும் சாயி
(2)
தாயு..மாகிடும் ஈசனும் சாயி
(MUSIC)
தில்லை ஆடும் சிவனும் அவனே 
பாதியாம்-சிவ சக்தியும் அவனே
(2)
தாயு..மாகிடும் ஈசனும் சாயி
மூன்று தேவியர் ரூபமும் சாயி
தாயு..மாகிடும் ஈசனும் சாயி
(MUSIC)
துர்க்கை..யாய்-இடர் தீமை-தனையே 
ப்ரேமை-ஆயுதம் தனைக் கொண்டு-களைவான் 
(2)
உள்ளம் மாறிக் கோவில்களாக
அதனில்-மாற்றங்கள் செய்தனன்-பெம்மான்
தாயு..மாகிடும் ஈசனும் சாயி
(MUSIC) 
மாலன் துணைத்-திரு தேவி வடிவாய் (2) 
மக்கள் வேண்டும் செல்வங்கள் தருவான் (2)
சாயி-நாமம் கூறும்-மனதில் (2)
நிறைந்து-வாழ்வில் துணையென நிற்பான் (2)

ஞானம் ஊட்டக் கலை-மகளாகி 
அலையும் மனதை உள்-முகமாக்கி
(2) 
சாயி..ராம்-எனும் நாமத்தின் ஒன்றால் (2)
ஞானமே தருவானிறைப் பெம்மான் (2)

தாயு..மாகிடும் ஈசனும் சாயி
மூன்று தேவியர் ரூபமும் சாயி
(2)

Notes: 

If we love and adore the mother, we shall be showing our love and devotion to all goddesses-BABA  




No comments:

Post a Comment