Sunday, March 14, 2021

115. Part 1 மனம் கனிந்தே பாடிடுவோம்(ஜகம் புகழும்)

 

KARAOKE Aligned

மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
அதன் அருள்மழையில் உயர்ந்துவிடும் கேட்குமிதயமே 
(2)
மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே..
ஹா..ஹா..

உலகத்தில் நாமெல்லாம் சிறப்புறத்தானே 
வந்த இறைவடிவம் நம்சாயிராம் 
நமக்கென நாளெல்லாம் புரிந்தனன் சேவையே (2)
அதுவே அன்பான காவியம் ஆகும்   
மனம் கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
அதன் அருள்மழையில் உயர்ந்துவிடும் கேட்குமிதயமே 
மனம் கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
(SM)

அன்றொருநாள் வெங்கவதூதரின் அருந்தவத்தால்
 மனம்-மகிழ்ந்த ஆண்டவன் நரன்-எனவே பிறப்பெடுக்க 
முடிவெடுத்தார் உலகினில் இந்த கலியிலே .
திருவுள்ளப் படியே அவதரித்தார் சாயி 
ஹா..ஹா..
ஈஸ்வரி பெற்றிட பர்த்தியில் திருமகன்
பிறந்ததும் இசையும் எழுந்தது அழகாய்த் தானே 
பர்த்தியில் தோன்றிய-கொடும் வ்யாதியைப் போக்கவே 
கிண்கிணி நாதபஜனையை நடத்தினனே (2)

பாட்டனார் கொண்டமரும் தனிமையில் வாழவே
அவருக்குச் சேவைசெய்து அருள் புரிந்தனனே 
(2)
பர்த்தியின் சிறுவர்கள் நல்லதைக் கேட்கவே (2)
சிறுவனாம் சத்தியத்தை நாடிச்சென்றனரே 
(MUSIC)
பர்த்தியின் நித்திலம் சத்ய-சாயி நாதன் 
நீதியை வயதை-மீறும் விதத்திலே சொன்னான் 
(2)
காலமெலாம்-நீங்கள் அன்புளம் கொள்ளுங்கள் (2)
வெஞ்சின சொல்விடுத்து நல்லறம் புரிவீர் 
ஆத்திரத்தால் அறிவிழந்த தந்தைபார்க்க 
மல்லிகையால் பேரை சொல்லி சத்யம் விந்தை செய்தான் 
அரும் புதல்வன் அற்புதம் கண்ட தந்தை அளவில்லா  மரியாதை அவரிடம் கொண்டார் ..
ஆஆஆ..
மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே 
அதன் அருள்மழையில் உயர்ந்துவிடும் கேட்குமிதயமே 
மனம்கனிந்தே பாடிடுவோம் சாயிசரிதமே
(MUSIC)





No comments:

Post a Comment