Thursday, January 9, 2025

1.அன்னையைத் தேடிடும் சேய்முகம்

 

அன்னையைத் தேடிடும் சேய்முகம் 
கண்டிடத் தாய்மனம் ஓடிடும்
அன்பினில் ஆயிரம் தாயையும்  
மிஞ்சி விடும்.. என்றே
பொங்கிடும் அமுதம்  போலவும்   
கணமும் அன்பினைப் பொழிகிறாய்
இவ்..வுலகில்..
 அன்பின் வடிவாய் ..
என்னெதிரில் வந்தாய் 

கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய்  
என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் 

எல்லையுண்டோ என்னும்-விதம் சாயி-உந்தன் அன்பு-மனம்
எல்லையில்லா மாசிருக்கும்  என்னும்-விதம் எந்தன்-மனம்
அத்தனையும் பொறுத்து-ஐயே அன்பு ஒன்றால் அரவணைத்தாய்  
நானிருக்கேன் கண்ணே-என்றாய் முறுவல் ஒன்றால் நிம்மதி தந்தாய்

என்தந்தை  தாயும்-நீ..!
எந்நாளும் குருவும்-நீ ..!
நீ அன்பின் ரூபம்  ..
அன்பே-ஓர் உருவாக நீ தன்னைத் தருகின்றாய் 
நீ ஒன்றே போதும் !
என்னவென்று சொல்லிடுவேன் சாயி உந்தன் ப்ரேமை தன்னை 
(Brief pause)
கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய் என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் 
 எந்நாளும் கைவிடாமல் நீ எந்தன் கூடே நின்றாய் 
கண்ணாடும் ப்ரேமை ஒன்றால் நீ அன்பைச் சொல்லித்-தந்தாய்
அன்பு-நான்  நீயும்-என்றாய்..! அன்பிலே என்னைக் கொண்டாய் 
சிந்தையில் நீயே ஆனாய் சிந்தையும் நீயே ஆனாய் 
என்னிலே நீயும் ஆக உன்னிலே நான் என்றாக 
மண்ணிலே இறங்கிவந்து என்னுளே புகுந்தாய் சாயி 
உந்தன்-முகம் .. 
தந்த-இதம் ..
எப்படிச் சொல் சொல்..லக் கூடும் ..!
அன்னையைத் தேடிடும் சேய்முகம் 
கண்டிடத் தாய்மனம் ஓடிடும்
அன்பினில் ஆயிரம் தாயையும்  
மிஞ்சி விடும்.. என்றே
பொங்கிடும் அமுதம்  போலவும்   
கணமும் அன்பினைப் பொழிகிறாய்  
---------------------
இவ்..வுலகில் ..
அன்பின் வடிவாய் ..
என்னெதிரில்-வந்தாய் 
(Brief Pause)
கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய் 
என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் (2) 



No comments:

Post a Comment