ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-முகம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதியுடன் வந்ததைப் பாரு
ஆறுதல் கூறிட நாளும் தரிசனம் அன்போடு
தந்தை வந்து-தருகிற கொள்ளை-எழில்-வந்து நீ-பாரு
பர்த்தி-ப்ரசாந்தியின் தந்தையின்-கண்களில் அன்பூறும்
அது கூறிடும் ஆறுதல் வார்த்தையில் பாசத்தினாறோடும்
(2)
ஆதி சிவன்-தன்னில் பாதியுடன் நல்-அவதாரம்
என்று பூமியில்-வந்தது இந்த யுகம்-பெற்ற பேறாகும்
என்றுமிவ் வையகம் பெற்றிடாத-நல்ல பேறாகும்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-முகம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதியுடன் வந்ததைப் பாரு
கொஞ்சி-நமையவன் கூப்பிடும்-சொல்லது பங்காரு
அந்த சொல்லினில்-ஊறிடும் அன்பில்-கரையும்-ஜென்மம்-நூறு
(2)
(2)
சத்திய சாயியின் ஞான-மொழி வற்..றா ஆறு
அது ஓடிடும் நெஞ்சினில் நல்ல மாற்றம் வருமாறு
அதற்குண்டு-பல்லாயிரம் பேர்களின் வாழ்க்கை-ருசு பாரு
ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-முகம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதியுடன் வந்ததைப் பாரு
நெஞ்சில்-கொடியரும் தந்தையி..னன்பில்-சி..றையானார்
அது செய்திடும்-மந்திரம் மாயத்தில்-நெஞ்சம்-ச..ரியானார்
(2)
பின்னர்-தன் வாழ்க்கையில் சேவை-பு..ரிந்து-சி..றப்பானார்
மனம் மாற்றம்-உற-சாயி அன்பு விருட்ச விதையானார்
ஏற்றம்-தர-சாயி அன்பு விருட்ச விதையானார்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-முகம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதியுடன் வந்ததைப் பாரு
ஆறுதல் கூறிட நாளும் தரிசனம் அன்போடு
தந்தை வந்து-த..ருகிற கொள்ளை-எழில்-வந்து நீ-பாரு
No comments:
Post a Comment