நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
என் சிறுமதி மொழித்திறமை அதனால் விவரிக்க முடிந்திடுமா
(1+SM+1)
(MUSIC)
பால் மணம் மாறாமல் நீ காஷா யம்தனைத் தரித்தாயே
பதின் நான்காம் வயதில் நீ அருள்தர ஜகத்குரு ஆனாயே
நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
(MUSIC)
உன் குரல் வழியாக நான் இன்னருள் மொழி பல கேட்டேனே
என்னிருள் தனைப்-போக்க என் பாட்டினில் வடிக்க முயன்றேனே
நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
(MUSIC)
ஆசைகள் விலகாதோ நின் அருள்மொழி ஒருதரம் கேட்டாலே
பூசை என்பதும் வேறோ யார் அதன்படி வாழ்க்கையில் நடந்தாலே
குரு நின்னருள் விழிக்கருணை அடடா வார்த்தையில் அடங்கிடுமா
என் சிறுமதி மொழித்திறமை அதனால் விவரிக்க முடிந்திடுமா
அடடா அடடா அடடா அடடா
No comments:
Post a Comment