Thursday, July 2, 2015

40. வந்திடு சாயி (அண்டமீரேழும் ஆண்டிடுமந்த)

 
 
 
 
( அண்டமீரேழும் ஆண்டிடுமந்த )
 
 
வந்திடு சாயி வந்திடு மண்மேல்
தந்திடு உன்னருள் உண்டு மகிழ்ந்திட
த்வாரக மாயீ சாயீ நீவந்திடு ஸ்ரீசத்யசாயி (2)

சேறாய்ப் புதைக்கும் வினைகளைச் சாடிட
வாராய் உலகைத் தேடிநீ காத்திட
த்வாரக மாயீ சாயீ நீவந்திடு ஸ்ரீசத்யசாயி (2)
உண்..ட-சோறு-நீ காட்டிய அன்பு (2)
குடித்த நீருன் தேன்மொழி சுவைதர (2)
த்வாரக மாயீ சாயீ நீவந்திடு ஸ்ரீசத்யசாயி (2)



அந்தர முறைந்திடும் தெய்வம்நீ சாயி (2)
உன்பதம் வணங்கி நற்கதி பார்பெற (2)
த்வாரக மாயீ சாயீ நீவந்திடு ஸ்ரீசத்யசாயி (2) 
நாமாவளி
வந்தாயே ஸ்ரீசத்யசாயி அருள்தந்தாயே பர்த்தியிலேநீ.. பர்த்தியிலேநீ..
(Different tune)

ஷிரிடியில் த்வாரகமாயி வினைபோக்கும் ஒளிதந்தாய்
வாராயோ மண்மேல்முன்போல
வாராயோ மண்மேல்முன்போல .. முன்போல
வந்தாயே ஸ்ரீசத்யசாயி அருள்தந்தாயே பர்த்தியிலேநீ.. பர்த்தியிலேநீ (3)


ஜெய் போலோ ஷிரிடி பர்த்தி பாபாஜிக்கி
 
 




No comments:

Post a Comment