Saturday, July 4, 2015

41. ஸ்ரீ சத்ய சாயீச தேவா (S: சம்போ மகா தேவதேவா)


 
Click here to listen to the song TBD **
 
 
( சம்போ மகா தேவதேவா )
 


ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சத்ய சாயீச தேவா

சிரம்கொண்ட அழகான கேசம்
 சுற்றி கரும்பட்டுச் சுடர்போன்ற அழகோடு கோலம்
(2)
தான்கொண்டு தந்தானே பாசம் (2)
தாயின் அன்பூறும் மனம்கொண்ட இறையவனைப் பாடு
ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின்பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சத்ய சாயீச தேவா

உளம்கொண்ட சாயீசன் அன்பே
பெருங்கடலாகப் படர்கின்ற ஆகாச கங்கை
(2)
பிறைபோன்ற அழகான நுதலை (2)
சித்தர் பணிகின்ற ஓம்கார ரூபத்தைப் பாடு
ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின்பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சத்ய சாயீச தேவா

எப்போதும் ஆனந்த தோற்றம்
           தீமை விரைந்தோடி நீக்கியே உலகத்தில் அதமம்
(2)
பாசத்தில் செய்தானே வதமும் (2)
அமரர் தலைபோற்றும் ஷீரிடீசன் துணைதன்னை நாடு 
ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின்பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சத்ய சாயீச தேவா

சிரம்தன்னில் கனம்கொண்ட மதனன்
தன்னை எரித்தவான் சடைகொண்ட விடமுண்ட கண்டன்
(2)
வேறில்லை சாயிபகவானே (2)
வெள்ளை மல்லிகையின் மனம்கொண்ட துல்லியனை நாடு
ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின்பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சத்ய சாயீச தேவா

வரம்தன்னை அருள்கின்ற தருவாம்
நெஞ்சின் ஈரத்தை மக்களின் மனம்விதைத்த பெருமான்
(2)
ப்ரேமையுடன் சாயிபிரான் வருவான் (2)
அன்பில் நெஞ்சம் கனிந்தவனின் இணையாரு கூறு
ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின்பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சத்ய சாயீச தேவா

சிறப்பான அன்பைவிதைத்த
லோகத் தந்தையாம் சாயீசன் பேர்சொல்லிப் பாட
(2)
புவிதோன்றும் துன்பங்கள் யாவும் (2)
ஓடி ஒழிந்தழியும் வரமருளும் அவனருளும் கூடும்

ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின்பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சத்ய சாயீச தேவா

நாள்தோறும் அவன் பேரைப் பாடும்
நல்ல நெஞ்சினில் சாயீசன் திருவருளும் கூடும்
புவிதோன்றும் துன்பங்கள் ஓடும் (2)
சித்தில் எந்நாளும் ஒமினொலி ஒலித்துன்னைக் காக்கும்
ஸ்ரீ சத்ய சாயீச தேவா ..நின்பாதம்சரண்தேவ தேவாதி தேவா

சர்வ தெய்வ ஸ்வரூப சாயி மூர்திக்கி – ஜெய்
 


 

No comments:

Post a Comment