Showing posts with label Soolamangalam. Show all posts
Showing posts with label Soolamangalam. Show all posts

Sunday, May 3, 2020

460. அழகாய்ச்-சொல் நாமத்தை(அழகெல்லாம் முருகனே) **



அழகாய்ச்-சொல் நாமத்தை சாயிபிரான் நாமத்தை 
அழுதே-சொல் நாமத்தை ஓடிடும் நம்-வினை 
(2)
ஓடிடும் நம்-வினை 
(MUSIC)
அழுக்கான மனம்-வெளுக்கும் விலகாதத் துயர்-விலகும் (2)
முழுதாக-ஜோதியுமே அழகாகத்-தோன்றிடும்  (2)
அழகாகத்-தோன்றிடும்
அழகாய்ச்-சொல் நாமத்தை சாயிபிரான் நாமத்தை 
அழுதே-சொல் நாமத்தை ஓடிடும் நம்-வினை ஓடிடும் நம்-வினை
(MUSIC)
ஓம்-சாயி ராம்-எனும் நாமத்தில் சீர்-வரும் (2)
தினமஞ்சி நாள்-முழுதும் அழும்-நிலைமை விலகிவிடும் (2)
தூவானக்-குளிரெனவே நெஞ்சிலே-இனிமை வரும் (2) 
நாளடைவில் பரமபத பாக்கியம் கிடைத்துவிடும் (2)
அழகாய்ச்-சொல் நாமத்தை சாயிபிரான் நாமத்தை 
அழுதே-சொல் நாமத்தை ஓடிடும் நம்-வினை ஓடிடும் நம்-வினை 







459. அடடா-பார் அழகனை (அழகெல்லாம் முருகனே) **



அடடா-பார் அழகனை அடடா-பார் அமுதனை 
அடடா-பார் குமரனை சாயிராம் இறைவனே 
(2)
சாயிராம் இறைவனே
(MUSIC)
 இவன் போல வேறாரு நெஞ்சுக் குகந்தவன் (2)
மனமெனும் பாலையிலே அன்புநீர் வார்த்தவன் (2) 
அன்புநீர் வார்த்தவன்
அடடா-பார் அழகனை அடடா-பார் அமுதனை அடடா-பார் குமரனை 
சாயிராம் இறைவனே சாயிராம் இறைவனே
 (MUSIC)
மனமெல்லாம் அன்பவன் அதைக் கொண்டே ஆள்பவன் (2)
நமைக்-கொஞ்சும் அன்னையவன் உள்ளத்தில் குழந்தையவன் (2)
 ஆஹா நம் இதயத்திலே ப்ரேமையை விதைத்த பிரான் (2)
தானாக அதில் புகுந்தே பெரும் மாற்றம் புரிகிறவன் (2)
அடடா-பார் அழகனை அடடா-பார் அமுதனை அடடா-பார் குமரனை 
சாயிராம் இறைவனே சாயிராம் இறைவனே