Thursday, January 28, 2016

78. விளையாட்டுமேன் (அலை பாயுதே)



விளையாட்டுமேன் ..ஸ்வாமீ விளையாட்டுமேன்
விளையாட்டுமேன் ..ஸ்வாமீ..என்னிடம் உந்தன்  விளையாட்டுமேன் 

விளையாட்டுமேன்..பிறக்காமல் விளையாட்டுமேன்
வந்து பிறக்காமல் விளையாட்டுமேன் (2)

ஏனிந்த சோதனை வந்து பிறக்காமல் விளையாட்டுமேன்
இன்னும் ஏனிந்த சோதனை வந்து பிறக்காமல் விளையாட்டுமேன்
ஸ்வாமீ உன்திரு விளையாட்டுமேன்

இன்னும் ஏனிந்த சோதனை வந்து பிறக்காமல் விளையாட்டுமேன் ..ஸ்வாமீ உன்திரு விளையாட்டுமேன்

உனக்கிணை-யாரு புவிமீதிலே-வந்த (4)
சாயிராம அவதாரமே உந்தன்அன்பு-மண்ணில்இனி கிடைக்குமா (2)

உன்திருவிளையாட்டுமேன்
ஸ்வாமீ உன்திரு விளையாட்டுமேன்
(இன்னும் ஏனிந்த சோதனை வந்துபிறக்காமல் விளையாட்டுமேன் ஸ்வாமீ … உன்திரு விளையாட்டுமேன்)

தளர்ந்த-பொழுது வந்து உன்தாள் நிமிர்த்துதே (2)
கையைத் தூக்கி உன்திருஉருவம் அருளுதே 
கனிந்த-நல் சாயிகீதம் காதில் ஒலிக்குதே (3)
நெஞ்சம்-உருகித் திருவமுதமாய்ப் பெருகுதே (3)

கனிந்தமனத்தில் இரக்கம்எடுத்து விரைந்து-எழுந்து திரும்பி-வா (2)
உன் இனித்தமுகத்தில் சிரித்துஎனக்கு மகிழ்ச்சிகொடுக்கப் பிறந்துவா
இனித்த-முகத்தில் சிரித்து-எனக்கு மகிழ்ச்சி-கொடுக்கப் பிறந்துவா
பாற்கடல்அலைதுயில் மாலவன்வடிவமே பனிமலைசிவன்என இருப்பவா(2)
உதறி-இவ்வுலகைநீ துறப்பதோ கதறி-சேய்களிங்கு துடிப்பதோ (2)
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமம்-தானோ
தினம்பாடியே-தொழுது மானிடம் சேவைகள் சாலவே புரிந்து நாடுதே இகம்வரா 

விளையாட்டுமேன்..ஸ்வாமீ உன்திரு விளையாட்டுமேன்
இன்னும் ஏனிந்த சோதனை வந்துபிறக்காமல் 
விளையாட்டுமேன் ஸ்வாமீ உன்திரு விளையாட்டுமேன்



அலகிலா விளையாட்டுடை சாயி மூர்த்திக்கி .. – ஜெய்

No comments:

Post a Comment