Wednesday, February 3, 2016

83. மாட சாமி அண்ணே (மாடு மேய்க்கும் கண்ணே) - 2




மாடசாமி அண்ணேஎன்..னென்று சொல்வேன் அண்ணே
PAUSE (2 BEATS)
மாடசாமி அண்ணேஎன்..னென்று சொல்வேன் அண்ணே
பர்த்தியிலே சாந்திகண்டேன் புத்துணர்வு நானும்கண்டேன் (2)
பக்தியிலே நாட்டம்கொண்டேன் புத்தியிலே தெளிவுகண்டேன் (2)
மாடசாமி அண்ணே என்..னென்றுசொல்வேன் அண்ணே
(MUSIC)
ஆஹா பர்த்தி புரியோ இந்திரனின் சபையோ என்று (2)
நான் வியந்து நின்றஇடம் சிறந்தசாயி குல்வந்த் கூடம் (2)
அதுக்கு-ஈடு-ஒண்ண நான் பார்த்ததில்லே அண்ணே
அதுக்கு-ஈடு-ஒண்ணே ....
 பார்த்ததில்லே அண்ணே
(SM)
உள்ளமெல்லாம் வெள்ளம்என்று அன்புக்கடல் கொண்டதென்று (2)
நல்லிதயம் ஒன்றுகண்டேன் சாயிஎன்ற பேரைக் கொண்டு (2)
சாமி இல்லை என்றால் அந்த சாயி யாரு அண்ணே

புட்டபர்த்தி க்ராமம் தன்னை பாரெல்லாம் தெரிய வைத்த (2) 
சாயிமண்ணில் செய்ததெல்லாம் சேவைஎன்ற பூஜை-ஒண்ணே (2)
சேவை-செய்த சாமி அதில் வாழுது-நம்ம பூமி
அன்பில் சேவைசெய்தசாமி அதில் வாழும்நம்ம பூமி
(MUSIC)
நாட்டில் ஜனங்களெல்லாம் வைத்தியத்தை செய்திடவே (2)
பைத்தியமாய் ஆயிடுவார் செலவழித்துச் செத்திடுவார் (2)
அந்தநிலைஇல்லே எனச் செய்தார் சாயி மண்ணில்

அனந்தபூர் மாகாணமே வறட்சியில் பரிதவிக்க (2)
நானிருக்கேன் என்றுசொல்லி நீரளிக்கப் பலனைப்பெற்ற (2)
க்ராமமோநானூறு அந்த சாயிக்கிணை யாரு (2)
(MUSIC)
பள்ளியிலே இடம்பிடிக்க ஓடியே தான்அலைந்திடுவார் (2)
பூமியிலே கோடிகோடி யாகப்பணம் செலவழிப்பார் (2)
தேவையில்லை-அதுக்கு சாயி கொடுத்தகல்வி இருக்கு 

ஆஹாநம் சாயிபுகழ் அடங்கிடுமா வார்த்தையிலே (2)
ஓஹோஹோ ஓஹோஎன்று பாடயுகம் ஆகுமண்ணே (2)

சாயிநாமம் ஒண்ணே நமைக் காக்கும்தெய்வம் அண்ணே
சாயிரான் ஒண்ணே நமைக் காக்கும்தெய்வம் அண்ணே
சாயி ராமராமா ...
(music)


சத்யசாயி பகவானுக்கி – ஜெய்


No comments:

Post a Comment