Wednesday, February 3, 2016

85. சாயி திருநீறணிந்து (சுட்டதிரு நீறெடுத்து)**

சாயிதிருநீறணிந்து வாயிலவன் பேரணிந்து சேவைசெய்யும் பக்தர்களைக் காத்திடும்..ம்..
விண்ணை விட்டுலகு வந்ததொரு தந்தைவடிவானவனின் பாதங்களே அற்புதத்தைக் காட்டிடும்
(2)
(MUSIC)

கையசைத்த மாத்திரத்தில் ஆகும்ஒரு உத்பவத்தில் வந்தஅருள் எத்தனையோ கோடியே..வந்தஅருள் எத்தனையோ  கோடியே
(2)
அந்தப் பேரழகுஅற்புதத்தை யாரெடுத்துக்கூறிடினும் ஆகும்யுகம்கோடிபலகோடியே 
ஆகும்யுகம்கோடிபல கோடியே
(2)

சாயிதிருநீறணிந்து வாயிலவன் பேரணிந்து சேவைசெய்யும் பக்தர்களைக் காத்திடும்..ம்..
விண்ணை விட்டுலகு வந்ததொரு தந்தைவடிவானவனின் பாதங்களே அற்புதத்தைக் காட்டிடும்
(MUSIC)

பக்தரிடை..யேநடந்து என்றும்திகழ் சேவைகொண்டு வந்தனன்வெங்..காவதூதர் கோரவே (2)+ (M)
(2)
வரம்என்றுவரு கின்றதொரு கன்றுமனம் கொண்டவர்க்கு
நன்றுஎன்று நன்கு அருள்கூறவே (2)
(2)

சாயிதிருநீறணிந்து வாயிலவன் பேரணிந்து சேவைசெய்யும் பக்தர்களைக் காத்திடும்.. ம்..
விண்ணை விட்டுலகு வந்ததொரு தந்தைவடிவானவனின் பாதங்களே அற்புதத்தைக் காட்டிடும் 
(2)
சாயி பாதங்களே அற்புதத்தைக் காட்டிடும்

ஷீரடி பர்த்தி பிரேம சாயி பகவானுக்கி – ஜெய்

No comments:

Post a Comment