Monday, February 22, 2016

95. உன் தாள் இனிமேல் (ப்ருந்தாவனமே குந்த பவனமே)





ஓ ..உன் தாள் இனிமேல் இந்த புவனம்மேல் வந்து நடந்திடுமா (2)
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே (2)
(ஓ ..உன் தாள் இனிமேல் ..) 

தரதர தரதரதிருநீ..றைத்தர (2)
பொலபொலபொலவென அதுவுமுதிர (2)
பொறுபொறு பொறுவென நடைவர காண தரிசனம் தந்திட சாயி..
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே
ஓ ..உன் தாள் இனிமேல் இந்த புவனம்மேல் வந்து நடந்திடுமா (2)
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே (2)
(MUSIC)
கடகடகடவென பஜனை பாட (2)
குளுகுளுகுளுவென சிரித்து பேச (2)
டும் டும் டும் எனும் தாளம் முழங்க (2)
பொலபொல நீர்வர அழுதிடும் கண்ணை துடைத்திட அருள்தர சாயி
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே
ஓ ..உன் தாள் இனிமேல் இந்த புவனம்மேல் வந்து நடந்திடுமா(2)
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே (2)
(MUSIC)
கிறுகிறுகிறு வெனும் மாயை போக்க (2)
விறுவிறுவிறு வென பாபம் போக்க (2)
ஓ.. நில்லுநில்லுநில்லு வென எமனைக் கூறி முக்தியைத் தந்திட சாயி
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே
ஓ ..உன்தாள் இனிமேல் இந்தபுவனம்மேல் வந்து நடந்திடுமா(2)
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே (2)
(MUSIC)
விதவிதமெனவரும் நோய்கள் போக்க (2)
ஹிம்சைஹிம்சைஹிம்சைஹிம்சை நீக்க
ஓ ப்ரும்மானந்தம் இதோஇந்தா என்றுவ..ழங்கிட சாயி
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே
ஓ ..உன் தாள் இனிமேல் இந்த புவனம்மேல் வந்து நடந்திடுமா (2)
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே (2)
(MUSIC)
தகிட .. திமித தக தக திமி தீம் தக தகதிக தோம்தக தோம்தக திரனா (2)
பசிக்குஇனிய தேனாமுத உணவினை புசிக்கரசிக்கத்தரும் பர்த்திநிவாசா(2)
தகிட .. திமித தக தக திமி தீம் தக தகதிக தோம்தக தோம்தக திரனா (2)
நவரசம்வடிந்திட சோபித்த-உன்முகம் வழங்கிடும்-தினமே மனோல்லாஸம்(2)
தக திக தோம்தக தோம்தக திரனா
கேட்க தேனினிய உன்குரல் திறனால்
தக திக தோம் தக தோம் தக திரனா
கலக்கம் பயம்விலக்க சாஸ்வதம் தரவா
கலியுகம் தனிலிரு நல் பிறப்பெடுத்தனை
நீயிங்கு மூன்றென உதிக்க ஜனார்த்தன 
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே
ஓ ..உன் தாள் இனிமேல் இந்த புவனம்மேல் வந்து நடந்திடுமா (2)
பர்த்தி சாயி ராமனே ப்ரேம சாயி ராமனே (2)


சத்ய சாயி பகவானுக்கி - ஜெய் 

No comments:

Post a Comment