Tuesday, September 1, 2015

69. சாயிபிரான் திருப்பாதம்(சாயி உந்தன் திரு நாமம்)

( காற்றினிலே வரும் கீதம் )


சாயிபிரான் திருப்பாதம் சத்ய சாயிபிரான் திருப்பாதம்
கேட்டது கொடுத்திடும் கேட்காதளிக்கும்

கேட்டது கொடுத்திடும் கேட்காதளிக்கும்
 உலகம்முழுதும் காக்கும் சத்யசாயிபிரான் திருப்பாதம்

(2)
மாவலிக்கருளிய வாமனன்பாதம் ஊழ்வினை போக்கிடும் பாதம் (2)
 நம்வலிபோக்கும் மருந்தாய்இருக்கும் சாயிராம்திருப்பாதம் (3)
பஞ்செனவே பஞ்செனவேம்ருது மெல்லிய பாதம் (2)
நம்பவபயங்கள் போக்கும் நம்பவபயங்கள் போக்கும்
 (சாயிபிரான் திருப்பாதம் சத்ய சாயிபிரான் திருப்பாதம் )
என்னிலும் உன்னிலும் நிறைந்தஆன்மம் தண்ணொளி வீசிடவே.. (2)
தாயெனவே அருள் ஆறாய்ப்பெருக்கும் சாயி ராம்திருப்பாதம் (2)
நாடிடுவோம் நாடிடுவோம்நாம் அவன்திருப்பதத்தை (2)
ஞானமெல்லாம் கொடுக்கும் (2)
சாயிபிரான் திருப்பாதம் சத்ய சாயிபிரான் திருப்பாதம்
கேட்டது கொடுக்கும் கேட்காதளிக்கும்
உலகம்முழுதும் காக்கும் சாயிபிரான் திருப்பாதம்
சத்யசாயிபிரான் திருப்பாதம்
விரைவினில்-ஸ்வாமி புவிவரும்நாளே உலகினில்வரும்ஒளியே (2)
ப்ரேமையின்சாயி புவிவரும்வரையில் (2)
நாமும் சேவையைப் புரிவோம்
ப்ரேமையின்சாயி புவிவரும்வரையில் நாமும்சேவையைப் புரிவோம்
ப்ரேமையிலே ப்ரேமையிலேசாயி திரும்பிடும்நாளை (2)
எண்ணி இருந்திடு தினமே (2)
 சாயிபிரான் திருப்பாதம் சத்ய சாயிபிரான் திருப்பாதம்
கேட்டது கொடுக்கும் கேட்காதளிக்கும்
உலகம்முழுதும் காக்கும் சாயிபிரான் திருப்பாதம்
திருப்பாதம் திருப்பாதம்








No comments:

Post a Comment