(சம்போ மகா தேவதேவா)
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
(2)
*சிரம்கொண்ட அழகான துணியும்
சுற்றி சுடர்விட்டு ஒளியோடு அழகோடு கோலம்
தான்கொண்டு தந்தானே பாசம் (2)
திங்கள் முடி சூடும் அன்புமய சிவரூபம் பாரு
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
எப்போதும் ஆனந்த தோற்றம்
சூர பத்மனை கொன்றிட உதித்திட்ட முருகன்
(2)
செவ்வாயில் சிரிப்போடு தோன்றும் (2)
சிவனின் கணம்போற்றும் ஷிரிடீசன் தோற்றத்தைப் பாடு
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
உளம்கொண்ட சாயீசன் அன்பே
பெருங்கடலாகப் படர்கின்ற ஆகாச கங்கை
(2)
பொன் கிடைத்தும் கிடைக்காத புதனில் (2)
சித்தர் பணிகின்ற ஓம்கார ரூபத்தைப் பாரு
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
வரம்தன்னை அருள்கின்ற தருவாம்
நல்ல குருவாரம் ஆகிய வியாழனில் பெருமான்
(2)
தட்சிணா மூர்த்தியாய் வருவான் (2)
ஞானம் தன்னில் பழுத்தவனின் இணையாரு கூறு
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
பாம்பணையில் துயில்கின்ற மாலன்
தன்னின் மலர்ப்பதம் பிடிக்கின்ற திருமகளின் வடிவாய்
(2)
வெள்ளியிலே சாயிபிரான் தெரிவான் (2)
வெள்ளை மல்லிகையின் மனம் கொண்ட துல்லியனைப் நாடு
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
ஏழேழு ஜென்மத்தின் வினையை
தலை எழுத்தாகத் தொடர்கின்ற பாவத்தின் சுமையை
(2)
ஏழுமலை வேங்கடவன் வடிவாய் (2)
கிழமை சனிதோறும் கோவிந்த ஷிரிடீசன் களைவான்
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
உலகத்தின் இருளைக் களைந்து
தினம் தவறாமல் அருள்புரியும் சூரியனின் வடிவாய்
(2)
ஞாயிற்று கிழமைகளில் சாயி (2)
சென்று போயிற்று எனும்வண்ணம் துயரைக் களைவான்
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
நாள்தோறும் அவன் பேரைப் பாட
லோகத் தந்தையாம் சாயீசன் திருப்பாதம் நாட
புவிதோன்றும் துன்பங்கள் யாவும் (2)
ஓடி ஒழிந்தழியும் வரமருளும் அவனருளும் கூடும்
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா..நின் பாதம்சரண்தேவ தேவாதி தேவா
ஸ்ரீ சாயி தேவா சர்வேசா
No comments:
Post a Comment