Monday, September 23, 2019

116. கண் பட்டதோ அன்று (குன்றுதோறும் நின்று -சிந்து பைரவி)


விருத்தம்
விழிக்குத் துணை சாயிமென்மலர்ப் பாதங்கள் (2)
மெய்ம்மை என்றால லதற்கு இணை  சாயீ..உன் பாதங்கள் 
அன்புபெய்த மழைக்குமிணை என வந்ததுநாளும்
இனித்த சுளை மொழிக்குஇணை தரும்தாளைக் காணோமே 
-------------------------------------------------
கண் பட்டதோ அன்று புண்பட்டதோசாயி ராமனடி காணோமே

கண்பட்டதோஅன்று புண்பட்டதோசாயி ராமனடி காணோமே
எந்தன் தாயின்மடி காணோமே
 (2)
நாளும் துடித்தேனே நானும்முடியாமே (3)
வாளின் கூரான பிரிவின்-துயராலே (2)
கண்பட்டதோஅன்று புண்பட்டதோசாயி ராமனடி காணோமே
எந்தன் தாயின்மடி காணோமே
சத்தியத்தின் அந்த அரும்பெரும் ஜோதியே (3)
சாத்தியமோ சொல்ல உன்பெரும் கீர்த்தியை (2) 
பிரணவ ஒலி கேட்கும் நீவிடும் மூச்சிலே (2)
தேனின் சுனை ஊறும் உன்னருட் பேச்சிலே (2)

 கண்பட்டதோஅன்று புண்பட்டதோசாயி ராமனடி காணோமே
எந்தன் தாயின்மடி காணோமே
(2)




No comments:

Post a Comment